Tuesday, January 04, 2005
அன்புள்ள மரத்தடி அன்பர்களுக்கு,
'காதலும் கவிதையும்' என்ற தொடரினை ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தொடரலாம் என்று உள்ளேன். இதுதொடர்பாக சில கருத்துகள்:
1. இன்றைய தேதியில் சுனாமி தவிர வேறு எது குறித்தும் எழுதுவது 'மனிதத் தன்மையற்ற செயல்' என்று தமிழ் இணையச் சூழலில் கருதப்படுகிறது. சுனாமி குறித்து எழுதுவதில் கூட, தனது சோகத்தை 'வெற்றுவார்த்தைகளால்' வெளிப்படுத்திக் கொண்டு இருக்காமல், 'நான் இவ்வளவு பணம் அனுப்பியுள்ளேன்' அல்லது 'நான் இந்த வகைகளில் உதவி செய்து கொண்டிருக்கிறேன்' என்று எழுதுவது மட்டுமே மதிக்கப்படுகிறது.
2. உதவி செய்பவர்களையும் அதை வெளியில் சொல்லி மற்றவர்களை உதவத் தூண்டுபவர்கள் மேலும் எனக்கு மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அதே சமயம் இது குறித்து எழுதாதவர்கள் அல்லது வேறுவிஷயங்கள் எழுதுபவர்கள் எல்லோரும் உதவியே செய்யாதவர்கள் போலவும், மனிதத்தன்மையற்ற, ஈவிரக்கமற்றமிருகங்கள் என்பது போலவும் சில சித்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. (நாய்,எருமை, 'இவர்களையெல்லாம் சுனாமி கொண்டு போகாமல் போனதே' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்இதற்கு நல்ல உதாரணம்.)
3. நான் ஒரு இயல்பான மனிதன் (normal, sympathetic human being) என்ற வகையில், சமீபகால வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய பேரழிவு இந்த சுனாமித் தாக்குதல் என்ற வகையில், நானும் இந்தத்துயர நிகழவால் பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்தேன்.இன்னும் அடுத்து வரும் காலங்களில் உதவிகள் தேவைப்பட்டால் செய்வேன் என்றும் தகுந்த நபர்களிடம் தெரிவித்துஉள்ளேன்.
4. ஒரு துயரத்திலிருந்து மீள ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு கால அளவுகள் இருக்கும். வெவ்வேறு வழிகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் துயரத்திலிருந்து மீள இயலும். தனிப்பட்ட துயரங்களிலிருந்து கூட இது வரைஎன்னை மீட்டெடுத்துக்கொள்ள நான் கையாண்ட வழிகள் பிரார்த்தனையும் வாசிப்பும் எழுத்தும். அதையேஇப்போதும் செய்தேன். (இவை, செய்த உதவிகளுக்கு அப்பால் என்பதறிக.)
5. இன்னல்களும் துயரங்களும் வந்த போதும், அவற்றுக்கு செய்ய வேண்டியன செய்த பிறகு, தனது சொந்தவாழ்க்கைக்குத் திரும்பி மீண்டும் வாழத் துவங்குவது மனித இனத்தின் தனிப்பட்ட சிறப்பு என்பது எனது நம்பிக்கை.
6. ஓரளவு சகஜ நிலைக்கு 'நான்' திரும்பி விட்டதனால் காதலும் கவிதையும் தொடரினை மீண்டும்தொடர்வதே எனக்குத் தெரிந்து நியாயமான செய்கையாகப் பட்டது. இதைச் செய்வதனால் சுனாமித்துயரங்களையோ அல்லது அவற்றுக்குச் செய்ய வேண்டிய நிவாரணங்களையோ யாரும் மறந்து விட்டதாக ஆகாது.
7. இந்த விளக்கங்களுக்கும் பின், சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால், அதற்கு நான் செய்யத் தக்கது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
8. 'எனக்கு மனிதத்தன்மை உண்டு' என்று இப்படி விளக்கமளித்து தெரிவிக்க வேண்டிய நிலை தமிழ் இணையச்சூழலில் ஏற்பட்டிருப்பது, சுனாமி அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் என் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது.
நன்றி.
-- மீனாக்ஸ்