<$BlogRSDURL$>

Friday, September 02, 2005

படைப்புகள் சுய புராணம் தலைவாசல்


ஜெ. ராமகிருஷ்ணன் - அம்மா அப்பா வைச்ச பெயர்

ஜெ. ரஜினி ராம்கி - அம்மா அப்பா சம்மதத்தோட எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்

3.2.1976 - அண்ணா மறைந்த நாள் என்று ஊரே துக்கத்திலிருக்கும் போது நான் பூமியை பார்த்த நாள்

பொழுது போக்கு - கேள்வி கேட்பது அல்லது கமெண்ட் அடிப்பது.. பத்திரிக்கைகளில் மட்டும்!

பி.எஸ்ஸி - என்ஜினியரிங் சேர முடியாமல் வேற வழியின்றி படிச்சு முடிச்சது

எம்.சி.ஏ - பொழைப்புக்காக படிச்சது

கலால் துறையில் உதவியாளர் வேலை - நினைச்சது கிடைக்காவிட்டாலும் கிடைச்சதை வெச்சுக்கிட்டு நினைச்சதை தேட வைக்க உதவுவது

பிள்ளையார் - சின்ன வயசிலிருந்து இந்த நிமிஷம் வரை எனக்கிருக்கும் ஒரே நம்பகமான, வாய் திறக்காத ரகசிய சிநேகிதன்.

ரஜினி - ஆதர்ஷ புருஷர். நிஜமான வழிகாட்டி

ஜாதி - சர்டி ·பிகேட்டிலும் அப்பாவுக்கு வரும் ஜாதக குறிப்புகளிலும் இருப்பது

மதம் - மனசிலும் நெத்தியிலும் மட்டுமிருக்கும் விஷயம்

கஷ்ட காலம் - நான் நானாகவே இன்னும் இருப்பது

நட்பு - எழுதிக் கொண்டேயிருப்பதால் கிடைக்கும் ஒரே ஆதாயம்

பலம் - ரஜினி ரசிகனாக இருப்பது

பலவீனம் - ரஜினி ரசிகனாக இருப்பது

மயிலாடுதுறை - நினைக்கும்போதெல்லாம் நெஞ்சில் ஏசியை ஆன் பண்ணும் அபூர்வ வார்த்தை

சந்தோஷமான நேரம் - ரஜினி, எனது கையை பிடித்து குலுக்கியது

குழப்பம் - எதிர்காலத்தை பற்றி நினைக்கும் போது எனக்கு மட்டும் வருவது

ஹேர் டை - இப்போதே அடிக்க வேண்டிய வஸ்து

சிகரெட் - ரஜினி பிடிப்பதால் நான் பிடிக்காமல் இருக்கும் வஸ்து

450 - எனது கிறுக்கலை விமர்சனமாக நினைத்து முண்ணணிப் பத்திரிக்கைகள் மெனக்கெட்டு அச்சிலேற்றிய கடிதங்களின் எண்ணிக்கை

300 - அரசு, மதன், மனிதன், தராசு, அந்துமணி, ·பீனிக்ஸ், சோ என்று எல்லோரும் போனால் போகிறதென்று பதிலளித்த எனது கேள்விகளின் எண்ணிக்கை.

80 - கண்ணில் பட்டது, தேடிப் படித்தது, காதால் கேட்டது என்று சகல விதங்களிலும் சேகரித்து அச்சில் வந்த துணுக்குகளின் எண்ணிக்கை

8 - ரொம்பவும் கஷ்டப்பட்டு எழுதிய ஒருபக்க சிறுகதைகளின் எண்ணிக்கை

7 - எனக்கு மட்டுமே புரிகிற ஜோக்குகளை அச்சில் ஏற்றியதன் எண்ணிக்கை

4 - 400 பக்கத்துக்கு மேல் கிழித்து எறிந்த பின்பு உருவான கவிதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இதுவரை பிரசுரமானவைகளின் எண்ணிக்கை

பாக்யா - இன்னமும் நான் எழுதியிராத ஒரே வாராந்திரப் பத்திரிக்கை

தினகரன் - இன்னமும் நான் எழுதியிராத ஒரே தினசரி

இதயம் பேசுகிறது மணீயன் - முதன் முதலில் தபால் முலம் தட்டிக்கொடுத்து எழுதச் சொன்ன பத்திரிக்கையுலக பிரபலம்

லேனா தமிழ்வாணன் - நேரில் தட்டிக்கொடுத்து நிறைய கேள்வி கேட்கச் சொன்னவர்

முதல் சாதனை - ரஜினியிடம் கேள்வி கேட்டது

ஒரே சாதனை - தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது

நீண்டகால சாதனை - ரஜினியை பற்றி விமர்சித்தோ பாராட்டியோ எழுதாமலிருப்பது

மகாத்மா காந்திஜி - மனித நிலையை தாண்டிவிட்ட மகான். பெரும்பாலான விஷயங்களில் எனது நிலையை தீர்மானிப்பது இவர் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள்தான்.

பொருளாதாரம் - இன்று வரை எட்ட முடியாத உயரத்திலிருக்கும் தாரம்.

தேர்தல் பணி - 1996 தேர்தலின் போது அம்மா ஆட்களிடம் அடிவாங்காத குறையாய் தப்பிச்ச வந்த சங்கதியை கெளரவமாக சொல்லிக் கொள்வது

தாடி - வாரத்தில் 3 நாட்களாவது உடனிருக்கும் சகோதரன்

விடுதலை - சினிமாவை பத்தியே பேசிக்கொண்டிருக்கும் சக நண்பனிடமிருந்து எனக்கு கிடைக்காத விஷயம்

காதல் - புரிந்து கொள்ளமுடியாத சங்கதிகளின் டாப் டென் லிஸ்டில் முதலில் இருப்பது

குடும்பம் - நான் சொல்வதை அடுத்தவங்க கேட்குமிடம்

ஆபிஸ் - அடுத்தவங்க சொல்வதை நான் கேட்டுக்கொள்ளுமிடம்

இசை - ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளில் மாட்டிக்கொள்ளாத ஒரே சங்கதி

நடனம் - பாத்ருமில் சோப்பை உடம்பில் ஊற வைத்தபின் கை கால்களுக்கு நான் கொடுக்கும் வேலை

பெட்ரும் - படுத்தால் உடனே து¡க்கம் வராத இடம்

கருத்துக் கணிப்பு - அடுத்தவர்களை பற்றி நான் போடும் கணக்கு

அரசியல் கட்சிகள் - எங்கள் தலைவரை வம்புக்கு இழுக்கும் நிஜமான வில்லன்கள்

நண்பர்கள் - எதிரிகள் போல நடந்து கொண்டாலும் துரோகிகள் அல்ல என்பதை அடிக்கடி நிருபிப்பவர்கள்

மேடை - நான் கோமாளி என்பதை வெளிச்சம் போட்டு காட்டுமிடம்

இலக்கியம் - ஆழம் தெரியாமல் காலை விடும் இடம்

ஆன்மீகம் - நிம்மதி கிடைக்காதபோதெல்லாம் நினைவுக்கு வருவது

சினிமா - ரஜினிக்காக மட்டும் இன்னும் சகித்துக்கொண்டிருக்கும் சங்கதி

அரசியல் - ஆண்டவனுக்கு அடுத்தபடியாக எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷயம்

லைப்ரரி - நிறைய புத்தகங்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு து¡ங்குமிடம்

வகுப்பறை - உடலை உள்ளுக்குள் வைத்துவிட்டு மனசை வெளியே அலையவிடும் இடம்

மழை - சென்னையில் இருக்கும் வரை பார்க்கவே முடியாத விஷயம்

என்கவுண்டர் - மெத்த படிச்ச ஆளுங்க மத்தியில் மாட்டிக்கொள்ளும்போது நேரிடுவது

யானை - சட்டையில்லாமல் படுத்து து¡ங்கும் நண்பனை பார்க்கும்போது ஞாபகத்துக்கு வருவது

இஷ்ட தெய்வம் - ஸ்ரீராகவேந்திரர். அதிகமாக கஷ்டம் கொடுக்காமல் து¡ரத்திலிருப்பதால்

முனிசிபல் ஆபிஸ் பிள்ளையார் - என்னுடைய வெற்றி தோல்விகளையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கும் ஒரே ஆ 'சாமி'1

காவிரி - வருஷத்துக்கு ஒரு முறை அக்கறையாய் கூப்பிட்டு அழுக்கை துடைத்து விட்டவளிடமிருந்து பதினைஞ்சு வருஷமாய் பதிலில்லை.

புதுக்கோட்டை - சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்து முதன் முதலில் ரத்த தானம் செய்ய வைத்து செம்மண்ணை இன்னும் சிவப்பாக்கிய ஊர்.

மகத்து வாழ்க்கை - 25 வருஷத்துக்கு முந்தி நான் பார்த்த சினிமா இன்னும் நெஞ்சுக்குள் ஸ்டில்லாக! முன்று வயது வரை வீட்டு முற்றத்தையே உலகமாக காட்டிய சின்னஞ் சிறிய கிராமம் இன்னும் சிதம்பரத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது...ஜாதி கலவரங்களில் பலியாகிவிடாமல்!

கலர் சாக்பீஸ் - ஒண்ணாங்கிளாஸ் டீச்சரின் தர்பூசணி பற்றிய கேள்விக்கு சரியான பதிலை சொல்லி நான் தட்டிச் சென்ற முதல் பரிசு!

ராஜரிஷி - நலங்கிள்ளியின் மகன்களை கொடுங்கிள்ளியிடமிருந்து காப்பாற்றும் காவி டிரெஸ் மீடியேட்டராக அஞ்சாங்கிளாஸ் ஆண்டு விழாவில் மேடையேறி மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தை சொதப்பலாக சொல்ல வைத்த நாடக பாத்திரம்

காமிக்ஸ் - பாட புஸ்தகத்தை ஓரங்கட்ட வைத்த முதல் வஸ்து

அன்னை ஓர் ஆலயம் - நினைவு தெரிஞ்சு நான் பார்த்த முதல் படம். அஞ்சலி தேவி யானையால் மிதிபட்டு சாகும்போது சத்தம் போட்டு அழுது அப்பாவிடம் ஆன் த ஸ்பாட் அடி வாங்க வைத்த ஓரே படம்.

கமல்ஹாசன் - பிடித்த நடிகர். ரஜினிக்கே பிடித்த நடிகர் என்பதால்!

தண்ணீர் தண்ணீர் - நிஜமான கிராமியப் படம். ஏனோ அரசியலாக்கப்பட்டதில் அட்ரஸ் தொலைந்து போனது.

ஒரு தலை ராகம் - நாகரீகமான முறையில் காதலை விளக்கும் அசட்டுத்தனமான படம். விளையாடிய தெருவும் படித்த காலேஜும் படத்தில் வருவது பெருமை

ஸ்ரீராகவேந்திரர் - வெறும் அற்புதங்களை மட்டுமே சொல்லாத நிஜமான ஆன்மீகப்படம்

உன்னால் முடியும் தம்பி - சினிமாவில் நல்ல விஷயங்களெல்லாம் வராதுங்கிற கருத்தை மாத்திக்க வெச்ச படம்

கே.பாலச்சந்தர் - குருவின் குரு. எந்த விஷயமிருந்தாலும் மனதை தொடுவதை மறக்காத சிகரம்

இளையராஜா - சினிமா இசையை அன்றாட வாழ்க்கையில் இட்டு நிரப்ப வைத்த அபூர்வ கலைஞன். து¡க்கமில்லாத ராத்திரிகளில் ஆர்மோனியப்பெட்டியுடன் துணைக்கு வருபவர்.

பூனா - இஇஇஇஇருக்கும்போது பிடிக்காத ஊராக இருந்தாலும் இரண்டே வருஷத்தில் ஏராளமான விஷயங்களை கத்துக்கொடுத்த 'குரு'வூர்

ரயில் - சென்னையிலிருந்து கிளம்பும்போது வருத்தத்தையும் பூனாவிலிருந்து சென்னைக்கு திரும்பும்போது குது¡கலத்தையும் கொடுத்து வாழ்க்கையின் அர்த்தத்தை சொன்ன அநாயசமாக சொன்ன நண்பன்

கொண்டாட்டம் - ஞாயிற்று கிழமை சாயந்திரம் கொண்டாட்டத்துக்கு பிறகு கோயில் உலா போகும்போது வரும் நிஜமான கொண்டாட்டம்

அப்பம் வடை தயிர்சாதம் - வாராவாரம் பாலகுமாரன் ஸார் வீட்டுக்கு போன் போட வைத்த தொடர்

அனுராதா ரமணன் - கோபம் என்ன விலைன்னு கேட்கும் பக்கத்து வீட்டு மாமி. பெண் எழுத்தாளர்கள் சொன்னவுடன் பளிச்சென ஞாபகத்துக்கு வரும் முகம்.

புன்னகை மன்னன் - மாவீரனை விட மட்டமான படம்னு விமர்சனம் பண்ணி பக்கத்து சீட் ·பிரெண்டிடம் ஒரு கையில் கீறலும் இன்னொரு கையில் பிரம்படியும் (உபயம் - ஆறாங்கிளாஸ் டீச்சர்) வாங்கி தந்த படம்

அறிவியல் ஆயிரம் - சென்னை வானொலி அனுப்பிய சிக்கிமுக்கி கல்லை நாள் முழுக்க உரசிப் பார்த்து நெருப்பு வராமல் நொந்து போனதால் ரேடியோவையே ஜென்ம எதிரியாக்கிவிட்ட புரோகிராம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவை - மழை பொழியும் நாட்களின் மத்தியான து¡க்கம் கலைந்து போர்வையிலிருந்து எட்டி பார்க்கும் போது காதில் விழும் பிரபலமான வாசகம்

நெசமாவா சொல்றே?! - பத்தாங்கிளாஸில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்த போது நிறைய பேர் உதிர்த்த பஞ்ச் டயலாக்!

அடுத்த வாரம் எஜமான் ரீலிஸாவுதாம்டா! - முதலும் கடைசியுமான தற்கொலை முயற்சியை முடக்கி போட்ட டயலாக்!

ஏவிசி காலேஜ் - ஆரம்ப நாள் முதல் ஆறு வருஷம் படிச்சு முடிக்கும் வரை மகிழ்ச்சியை விட அதிர்ச்சியையே அதிகமாக தந்த ஸ்தலம்.

எஸ். ராமகிருஷ்ணன் - சந்திக்க விரும்பும் நபர். கமர்ஷியல் கட்டாயம் என்னும் 'துணையெழுத்து' இல்லாமலிருந்தால் 'பாபா', 'உ(பபா)ண்டவ'மாக வந்திருக்கும்!

ஒரே லட்சியம் - நல்ல ரஜினி ரசிகனாக இருப்பது

நீண்டகால வேதனை - பத்திரிக்கைகளிலெல்லாம் எழுதுவீங்களான்னு பல பேர் கேட்குறதுதான்!

This page is powered by Blogger. Isn't yours?