<$BlogRSDURL$>

Monday, May 14, 2007

எழுதிப் ப(க)டித்த உரை 

இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,

இனிய மாலை வணக்கங்கள்.

சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் இந்த தமிழ்புத்தாண்டு விழாவை நடத்துவதென்பது எங்கள் தஞ்சாவூரில் பெண்ணுக்கு கல்யாணம் செய்வது மாதிரி. பையன் நல்ல பையனா இருக்கணும். கெட்ட பழக்கம் ஏதும் இருக்கக்கூடாது. சம்பந்தி மனசு கோவிக்கக்கூடாது. பாட்டுக் கச்சேரி/ டான்ஸ் எல்லாம் தூள் பறக்கணும். முக்கியமா காப்பி நன்றாக இருக்கணும்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக என் நிலைமை கல்யாணத்துக்கு வேலை செய்வது மாதிரி தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறவரை தமிழ்மன்றத்தில் Chair person என்கிறார்கள். யாரால் சேர்ல உக்காரவே முடியாதோ அவங்களுக்குத்தான் சேர் பர்ஸன்னு பேரு. காமெடியா இல்லை.??!!! கடந்த ஒரு மாசமா ஆர்னால்டு ஷ்வாசர்நெகர்கிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு தமிழ்மன்ற வேலைதான் பாத்துகிட்டு இருக்கேன். சாக்ரமண்டோல நிறைய பேரு என்னுடைய ஈமெயில் ஐடியை ஸ்பாம் லிஸ்ட்ல சேத்துட்டாங்க. செல்போன்ல என் நெம்பர் தெரிஞ்சாலே தலையை சுத்தி ·போனை தூக்கி வீசிடுறாங்க. அதுவும் கடந்த மூன்று நாட்களாக மூர்த்தியும், சந்தானமும் எப்ப ·போனை எடுத்தாலும் நம்பரைக் கூட பாக்காம, "சொல்லுங்க சுந்தர்" ன்னு சொல்ல ஆரமிச்சிட்டாங்களாம். நிலைமை அப்படி ஆயிட்டுது.

சரி விஷயத்துக்கு வர்றேன். தமிழ்மன்றம் சாக்ரமண்டோல காம்ப்ளான் குடிச்ச குழந்தை மாதிரி வளர்ந்துகிட்டே இருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்களோட எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.நிகழ்ச்சியை நடத்தறதுக்கு, எங்களுக்கு உதவி செய்ய, ·போட்டோ எடுக்க என்று தானாக முன் வந்து உதவி செய்யும் தன்னார்வலர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கிட்டே இருக்கு. நிகழ்ச்சிகளின் தரமும் மெள்ள மெள்ள உயர்ந்து கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் ஸ்கூல் எக்ஸாம் டைம். இருந்தாலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், குழந்தைகளும் ஏகப்பட்ட முறை ப்ராக்டீஸ் பண்ணி உங்களையெல்லாம் அசத்து அசத்துனு அசத்துறதுக்கு ரெடியா இருக்காங்க. ஷோவை பாத்து என்ஜா¡ய் பண்ணுங்க. ஏகப்பட்ட குழந்தைகள் நிகழ்ச்சிகளோட ·ப்யூஷன் ம்யூசிக், மற்றும் சாக்ரமண்டோவின் "பழம்பெரும்" கலைஞர்கள் பங்குபெறும் கதம்பப் பாமாலை, கலாட்டா கல்யாணம் என்கிற காமெடி ட்ராமா போன்றவைகளும் உண்டு.
இந்த வருஷம் சில புதுமைகள் பண்ணி இருக்கோம்.

* Event Brochure ·புல்லா கலர்லேயே போட்டு இருக்கோம். பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. முக்கியமான தமிழ் லிங்க்ஸ் போட்டிருக்கோம். பாருங்க. கம்ப்யூட்டர்ல தமிழ் யுனிகோட் ·பாண்ட் வெச்சு எப்படி தமிழ் எழுதறதுன்னு ஒரு அருமையான லிங்க் இருக்கு.இதெல்லாம் "டாமில் என்க்கு தெராது" ங்கிறதை பெருமையா சொல்லிக்கிறவங்களுக்கு இல்லை. ஓலைச்சுவடி, பேப்பர்ங்கிற வாகனத்தை எல்லாம் கடந்து கணிணி உலகத்துலயும் தமிழ் வாழணுன்னு நினைக்கிற, " என்றுமுளதென்தமிழ்" என்று பரவசப்படுகிற சராசரி தமிழனுக்கு...

* குலுக்கல் சீட்டு முறையில் தேந்தெடுக்கப்படும் அதிர்ஷ்ட சாலிகளுக்காக Raffles program இருக்கு. கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன. இதுக்கு முதல்ல நமீதா வரதா இருந்தாங்க. சரி..அடுத்த முறை பாத்துக்கலாம்னு லோக்கல் செலிப்ரிட்டிய வச்சு சமாளிச்சு இருக்கோம். டிக்கிட்டு ஒர் ரூவாதான். ஒருத்தரே எத்தனை டிக்கட் வேணும்னாலும் வாங்கலாம். கலக்குங்க.

* நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஏகப்பட்ட இந்த முறை ஏகப்பட்ட பேர் ஆர்வம் காட்டினாங்க. ஆனா கடைசி தேதிக்கு அப்புறம் வந்ததுனால, கனத்த மனசோட நிறைய பேருகிட்ட சாரி. முடியாதுன்னு சொல்ல வேண்டிய நிலைமை. அதனால On the spot performance அப்படின்னு ஒண்ணு பண்ணப் போறோம். எல்லா நிகழ்சிகளும் முடிஞ்சு டின்னர் டயத்துல பெரியவர்கள்/ குழந்தைகள் யார் வேணா ஸ்டேஜ்ல வந்து தன் திறமைகளை காட்டலாம். மக்கள் டின்னர் சாப்பிட்டுகிட்டே உங்க நிகழ்ச்சியையும் என்ஜாய் பண்ணுவாங்க. டின்னருக்கு முன்பாக நடந்த அத்தனை நிகழ்ச்சிகள்ளயும் ஸ்டேஜ்ல perform பண்ண முடியாதவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* வழக்கமா கொடுக்கிற சாப்பாடு வகை இல்லாம இந்த முறை புதுசா ட்ரை பண்ணி இருக்கோம். அது என்னங்கிறது சர்ப்ரைஸ். சாப்பாட்டு நேரத்துல தெரிஞ்சுக்குவீங்க.

* வந்திருக்கின்ற மக்களின் ஈமெயில் முகவரிய கலெக்ட் பண்றத்துக்கு ஒரு பதிவேட்டுடன் அபிஷேக்பச்சன் வரப்போறாரு. அடுத்த நிகழ்ச்சிக்கு உங்களை மறக்காம கூப்பிடத்தான் இந்த ஏற்பாடு. கொஞ்சம் விவரங்கள் தந்து உதவுங்கள். உங்களுடைய ஈமெயில் ஐ.டி பத்திரமாக பாதுகாக்கப்படும்.

* இந்த வருஷ நிகழ்ச்சியை படமெடுக்க நமக்கு ஒரு professional photograpaher தமிழ் கம்யூனீட்டிலேர்ந்து கெடைச்சிருக்கார். நிகழ்ச்சி ·போட்டோ வேண்டுபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்,நிகழ்ச்சி சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். இன்னமும் நல்ல முறையில் நடத்த அது எங்களுக்கு உதவும். Sactamil.org என்கிற எங்கள் இனையதளம் சம்பந்தமான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

முக்கியமான அறிவிப்பு இன்னொண்ணு இருக்கு.

Sactamil ன்னு ஒரு யாஹ¥ க்ரூப நடத்திகிட்டு உங்களை எல்லாம் தொல்லை படுத்திகிட்டு இருக்கிற சுந்தர் நான் தான். லோக்கல் தமிழ் மக்களுக்கு ஒரு தொடர்பு சாதனம் இருக்கணுங்கிரதுக்காக தான் அதை ஆரம்பிச்சேன். குறைவான புகார்களோடு அது போய்க்கிட்டு இருக்கு. மற்ற அறிவிப்புகள், பகிர்தல்களோட தமிழ்மன்றம் தொடர்பான நிகழ்ச்சி அறிவிப்புகள் அதுல வரும். ஆணா தமிழ்மன்றத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க என் தனி முயற்சி. நான் தமிழ்மன்ற பொறுப்பிலேயும் இருகறதனால், நெறைய பேர் அந்த குழப்பத்துல இருக்காங்க. அதனை தெளிபடுத்தவே இந்த விளக்கம்.

கடைசியா, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கையேட்டில் விளம்பரம் தர முன் வந்திருக்கின்ற அன்பர்கள் அவைவருக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். அவர்கள் மூலம் கிடைக்கின்ற விளம்பர வருவாயை வைத்துத்தான் நிகழ்சியை நல்ல முறையில் நடத்த முடிகிறது. அப்படியும் கூட நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்ர்கூட டிக்கெட் வாங்கித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. பங்கு கொள்கிறவர்கள் அத்துணை பேரும் சேர்த்து நூற்று பத்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கினால், ஏற்கனவே பத்து வயதின் கீழுள்ள குழந்தைகளுக்கு வழங்கியுள்ள இலவச அனுமதியுடன் சேர்த்து, அது எமக்கு மேலும் பளுவாகி விடும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

வணக்கம்.

Thursday, May 03, 2007

Thaks Sujatha/AV 

இலக்கணத்தை மாற்றுகிற காரியமும்

இலக்கணத்தை உடைக்கிற செயலும்

இலக்கணத்தை அறியா பலவீனத்திலிருந்து

எழுந்து அமைதல் கூடாது -- ஜெயகாந்தன்

This page is powered by Blogger. Isn't yours?