<$BlogRSDURL$>

Wednesday, August 03, 2005

சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்.... - இரா.முருகன்

ஒரு சினிமாப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது டைரக்டர் கோல்டி ஆனந்தின் பேட்டி கண்ணில் பட்டது. இந்தோ ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் 'தி கைடு' நாவலைப் படமாக டைரக்ட் செய்த அனுபவத்தைச் சொல்லும் போது மனுஷர் படு காஷீவலாகக் குறிப்பிடுகிறார்.... "நாவல்ல கதையம்சம் குறைவு. நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படத்தில் ஈடுகட்டினேன்.."சிறந்த கதாசிரியரான ஆர்.கே.நாராயணனுக்கே கதை சொல்லத் தெரியவில்லை என்கிற பாலிவுட்டில் குப்பை கொட்ட கே.ஏ.அப்பாஸ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களும் 'பாபி' திரைக்கதை எழுதிப் பாபத்திலும் பணத்திலும் பங்குபெற்றது உலகம் அறிந்த சங்கதி.

எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் தமிழில் எழுத்தும் திரையும் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வம்.தி.ஜானகிராமன் எழுதிய 'கரும்பு' திரைக்கதை நிலையிலேயே நின்று போனதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக சலீல் சவுத்ரி இசையில் ஜேசுதாஸ் பாடிய 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற சிலப்பதிகாரக் கானல்வரியை முன்பெல்லாம் சிலோன் ரேடியோவில் நாள்தவறாமல் ஒலிபரப்புவார்கள். ஜானகிராமனின் 'மோகமுள்' ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் மனதில் தைக்காமல் போனாலும் நேர்மையான முயற்சிதான்.

'செம்மீன்' நாவலை தகழியின் எழுத்தில் விரிந்தது போலவே திரைக்குக் கொண்டுவர ஒரு ராமு காரியத் கிடைத்தது போல, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'வின் தட்சிண கன்னட கிராமப் பிராமணர்கள் வெள்ளித் திரையில் உயிர் பெற ஒரு கிரீஷ் கர்னாட் வந்தது போல, வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிளுகள்' மலையாளத் திரையில் உயர அடூர் கோபால கிருஷ்ணன் முயற்சி எடுத்தது போல, தமிழில் என்ன நடந்திருக்கிறது?யோசித்ததில், கல்கியின் 'தியாக பூமியை' அந்தக் காலத்திலேயே ஒளியில் வடித்த கே.எஸ்.சுப்ரமண்யமும், பொன்னீலனின் 'உறவுகள்' குறுநாவலை, 'பூட்டாத பூட்டுக்களாக' நிலைக்க வைத்த மகேந்திரனும், து.ராமமூர்த்தியின் 'குடிசை'யைத் திரையில் வேய்ந்த ஜெயபாரதியும் நினைவுக்கு வருகிறார்கள். (இந்தப் படம் எல்லாம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றனவா என்பது வேறு ஒரு விஷயம்!) அப்புறம் ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவனை' எழுதியதைப் போல் படமாக்கிய ஜெயகாந்தன்.நாலு சிறுகதைகளை உள்ளடக்கிய கறுப்பு வெள்ளைப் படமான ஜெயகாந்தனின் 'புதுச் செருப்பு' யாராலோ ரொம்ப நாளாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. பேன் வாரத்திலிருந்து பெருமாள் வாரம் வரை தேர்ந்தெடுத்து சினிமாப்படம் போடும் கேபிள் டிவிக்காரர்கள் இலக்கிய வாரம் வைத்து இது போன்ற படங்களையும் காட்டலாமே! கதை திரைப்படமாகிறதோ இல்லையோ, எழுத்தாளர்கள் திரைக்குப் போனது அசை போட, சுவாரஸ்யமான விஷயம்தான்.

நாற்பதுகளில் புதுக்கவி¨தியின் பிதாமகர் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் 'ராமானுஜர்' படத்தில் நடித்ததாகத் தெரிகிறது. அறுபதுகளில் எடுத்த படத்தில் தேவிகாவின் கனவுக்காட்சியில் மன்மதனாக வந்தவர் 'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிட'ச் சொல்லிக் கவிதை எழுதிய சோ.வைத்தீஸ்வரன். எண்பதுகளில் அமுதவன் கதை எழுதிய படத்தில் ஒரே ஒரு காட்சியில் சுஜாதா சங்கோஜத்தோடு தலைகாட்டி விட்டு ஆளை விட்டால் போதும் என்று திரைக்குப் பின்னால் ஓடிவிட்டார். பாளை சண்முகத்தின் 'காணி நிலம்' படத்தில் சட்டசபைக் காட்சியில் சபாநாயகராக சா.கந்தசாமி நடித்திருக்கிறார்.மேடையில் 'நாற்காலிக்காரராக'வும் சின்னத்திரையில் பனியனைத் திருப்பிப் போட்டுக் கொண்டு டென்ஷனுடன் வலம்வரும் கீழ் மத்தியதரக் குடும்பத்தலைவராகவும் வந்த அசோகமித்திரன் ஜெமினி சினிமாப் படக்கம்பெனியில் வேலை பார்த்த போதோ அப்புறமோ சினிமாவில் முகம் காட்டவில்லை.அரவிந்தனின் 'போக்குவெயில்' படத்தில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல, சையத் மிர்ஸாவின் 'மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ' படத்தில் இந்தி எழுத்தாளர் பீஷ்ம் சிஹானி போல (மறைந்த குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானியின் சகோதரர் இவர்) படம் முழுக்க்க கதாநாயகனாக, தமிழ் எழுத்தாளர் யாராவது வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.***************

இதனைத் தொடர்ச்சியாக யோசிக்கும் போது புதுமைப்பித்தனும் விந்தனும் தமிழ்ச் சினிமாவில் போராடி துரதிர்ஷ்டவசமாக வெற்றி பெற முடியவில்லை என்று பழைய கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்கிற படத்தில் கலெக்டராக வருகிற சிறுவேஷத்தில் நடித்திருக்கிறார். (பின்பு இந்தக் காட்சியை அவரே நீக்கிவிட்டார்)எம்.ஜி.ஆர் எத்தனை முறை கையை உயர்த்துகிறார் என்று சிறுவயதில் நாங்கள் வேடிக்கையாக எண்ணிக் கொண்டிருந்த பாடலான 'புதிய வானம், புதிய பூமி' பாடலில் எழுத்தாளர் சாவி ஒரு காட்சியில் பரிதாபமாக முழித்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டு போவார். ('நான் நடித்ததினால்தான் இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது' என்று நகைச்சுவையாக குறிப்பிடுவார் சாவி.)'கேளடி கண்மணி' படத்தில் பாலகுமாரன் ஆசிரம நிர்வாகியாக ஒரு காட்சியில் வந்து போவார்.'விருமாண்டி' படத்தின் இறுதிக் காட்சியில் மாலன் செய்தியாளராக வருவார்.'சொல்ல மறந்த கதை' படத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு திருமணத்தை தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுபவராக சில காட்சிகளில் வருவார்.எழுத்தாளர் பூமணி அவருடைய 'கருவேலம் பூக்களை' என்.எப்.டி.சி. உதவியுடன் திரைப்படமாக்கினார்.தங்கர் பச்சானை எழுத்தாளர் என்று அங்கீகரிக்க தயாராயிருந்தால், அவரது கல்வெட்டு என்கிற அபத்தமாக எழுதப்பட்ட கதையை அழகாக 'அழகி'யாக உருமாற்றம் செய்தார். நாஞ்சில் நாடனின் 'தலைகீழ் விகிதங்கள்' 'சொல்ல மறந்த கதையாக' வெளிவந்தது. தங்கர்பச்சானே ஒரு படத்தில் கதாநாயகனாக (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) நடித்துக் கொண்டிருக்கிறார்.(நண்பர்கள் தாங்கள் அறிந்த விவரங்களைக் கொண்டு இந்த பதிவை முழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டுகிறேன்)()அப்புறம்..... இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.பிரதம மந்திரியையே கா¡ட்டூன் போட்டு கேலி செய்யும் இந்த தேசத்தில் எழுத்தாளர்களையும் சற்று நகைச்சுவைப்படுத்திப் பார்ப்பது ஒன்றும் உலகமகா குற்றமில்லை என்றும் தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி இன்னும் இற்றுப் போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நம் எழுத்தாளர்கள் வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பார்களாயின் அவர்களுக்கு இந்த பாத்திரங்கள் பொருத்தமாயிருக்கும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஜெயமோகன் - கோயில் பூசாரி
எஸ்.ராமகிருஷ்ணன் - போலீஸ் கான்ஸ்டபிள்
சுஜாதா - தலைப்பாகை அணிந்த தமிழ் வாத்தியார்
சல்மா - மகப்பேறு மருத்துவர்
அ.முத்துலிங்கம் - பேங்க் மானேஜர்சாருநிவேதிதா - காமெடி ரவுடிஅசோகமித்திரன் - கிரிக்கெட் அம்பயர்பிரபஞ்சன் - மேஜிக் நிபுணர்பெருமாள் முருகன் - நூலகப் பணியாளர்வண்ணதாசன் - விளம்பர பட அப்பாகி.ராஜநாராயணன் - கிராமத்து கதாநாயகியின் அப்பாசிவசங்கரி - சமூக சேவகிஞாநி - பிரதான வில்லனுக்கு பின்னால் நிற்பவர்

This page is powered by Blogger. Isn't yours?