<$BlogRSDURL$>

Monday, May 23, 2005

துரை.சண்முகம் கட்டுரை - காஞ்சி விவகாரம்
=======================================

அவா அவா செய்த கர்ம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பார்ப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் விஷயத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவர்களின் பாங்கனாக துக்ளக், தினமலர் வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளூ ஃபிலிமை பூக்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது.

விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பார்ப்பன ரவுடிகள் முதலாக, ஆர்.வி., சேஷன், சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனர். பின்னே, கதாநாயகர்களைக் கைது செய்தால் பாங்கர்களுக்குப் பதறாதா?குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல ""பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்மருந்தும் உண்டோ! மயிலோ இதுவே!''பிரிந்தோர் கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பார்ப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கர்ராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொர்ணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பார்ப்பனக் கும்பல்.

தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியர்களும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிர்த்துப் போராடும் போதெல்லாம் போராடுபவர்களை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்கார்டிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பார்ப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிர்த்து கார்ட்டூன் போடுவதென்ன?""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா!அண்ணா சாலை நூலுடா!இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பார்ப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தர்மம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரர் என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பார்த்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்; மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார், எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவர்களுடைய தர்மம். போலீசு ஸ்டேஷனில் ஒருவனை சித்திரவதை செய்தார்கள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வெளியிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பார்த்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா; வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறார்' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பூமிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஒளிவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பார்க்க: தினமலர் கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா?

ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பார்ப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியார் சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பார்ப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேர்வழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சர் மாறனும், டி.ஆர். பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனர்... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சர்கள் செய்தால்? அப்படி ஓர் உரிமை அவர்களுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன்... தாட்... பூட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்?

சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மர்மம் என்ன?20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பார்க்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமர்க்களப்படுதே! ஜனாதிபதி, கவர்னர், பிரதமர் யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோர்ட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட் வளாகத்தில் பார்ப்பனத் தடியர்களும், பாரதிய ஜனதாக் கொடியர்களும் ஜெயேந்திரனுக்குப் புடைசூழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசூழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞர்களே ""இது என்ன கோர்ட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை?

இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறார்கள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பார்ப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?சூத்திரர் என்றால் தோலை உரிபார்ப்பான் கொன்றால் மனித உரிமை!""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சூழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறார். அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பார்ப்பனத் தடியர்களையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா?

சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசூர் சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமார் என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பார்ப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவர் விசாரித்ததால், அவர் ஏற்öகனவே மனித உரிமை மீறியவர் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறார்?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரர்களிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிøடயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீர்ப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!""தர்மபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரர்கள் மனிதர்களாகக் கருதுகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதர்களாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகார்கள் வருகின்றன'' — இது சோவின் பதில்.சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவர் மேலேயே தீர்ப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யர், ரகு அய்யர் மீதெல்லாம் குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.

மேலும், ""சங்கராச்சாரியார் வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றார்களா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாது; சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறார்: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும் பார்ப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டர் கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது.

குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யார் சொல்வது உண்மை? ஜஹீரா ஷேக் மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டார் என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டார்களென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பார்ப்பனர்களின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பார்ப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது புஷ்யமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போர்த் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னர் வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்பூலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணர்களை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பார்ப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமர்களுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ?

திரும்பத் திரும்ப, மற்றவர்கள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பார்ப்பன வரலாறு.பஸ் ஊழியர் போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலர் சேர்க்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறார்.தவிர, அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பார்ப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரர் மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞர் கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யூசன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யூட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டார்.இப்படி, பஸ் ஊழியர் தொடங்கி, சாலைப் பணியாளர், சத்துணவுப் பணியாளர், ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பார்ப்பனக் கும்பலின் வாடிக்கை.

வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பார்ப்பனியமே:சுரங்கத்திற்குள் போன பழனி போகர் திரும்ப வரவேயில்லை;அறைக்குள் சென்ற வள்ளலார் "ஜோதி' மயமானார்;சிவனைப் பார்க்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை;அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பார்ப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்; உழைக்கும் வர்க்கத்திற்குக் கட்டாயம் உண்டு.

நன்றி - வே.மதிமாறன்
====================

பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை."என்னப்பா இது போலி சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க' என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.ஆனால் ஜெயேந்திரன் கைதான போதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டால் கண்டிப்பாக அதில் ஜெயேந்திரனின் கைதும் இடம் பெறும்.

"என்ன இந்த ஆளு இவ்வளவு கேவலமா இருக்கானே?' என்ற ரீதியில் ஆரம்பித்து தங்கள் கவலைகளை கொஞ்ச நேரம் மறந்து, ஜெயேந்திரனின் உல்லாச, சல்லாப வாழ்க்கையைப் பற்றி கை கொட்டிச் சிரித்துப் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் கலைகிறார்கள். (இது ஒன்றுதான் ஜெயேந்திரனால் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி) இத்தனைக்கும், சுவாரஸ்யமாகப் பேசுவதற்கு சதுர்வேதி மீது நிறைய பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் மக்களின் மனதை உற்சாகமாக வைத்திருப்பதில் ஜெயேந்திரனே முன்னணியில் இருக்கிறார். இந்த வகையில் ஜெயேந்திரனுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு.மக்களின் மனநிலை இப்படி இருக்க தினமலர் நாளிதழ் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி செய்தி வெளியிடுகிறது. கீழ்க்கண்ட இந்தச் செய்திதான் தினமலரின் அரசியல், தத்துவம், பத்திரிக்கை தர்மம்.

அதாவது, ஆதாரத்தோடு இருக்கிற செய்திகளை பொய் என்பதும், ஆதாரமற்ற செய்திகளை மெய் போல் வெளியிடுவதும்தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் ஆட்களை பொறுத்து ஆதரவாகவோ, எதிராகவோ வெளிப்படும். இதோ ஆதாரமே இல்லாமல் ஒரு ஆதரவு "செய்தி':""காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கும் சதியின் ஒரு அம்சமாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாள மன்னரை மடத்தின் தீவிர பக்தராக மாற்றியது உட்பட பல தொழிலதிபர்களையும் மடத்தின் தீவிர ஆதரவாளர்களாக்கியது ஜெயேந்திரரின் நடவடிக்கைகள்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்... ஜெயேந்திரரின் இந்த நடவடிக்கைகளால் மடத்தின் புகழ் பரவியது. இதைப் பிடிக்காமல் பலர் மடத்துக்குள்ளேயே குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். இந்தக் குளறுபடிகளைச் சரி செய்ய முயன்ற போது அவருக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின.... திடீர் திடீர் என மடத்து நிர்வாகிகளுடன் பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... திட்டமிட்டு கொலை வழக்கில் அவரைச் சிக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மடத்தில் உள்ள கோஷ்டிகளில் சிலர் இப்போது வெளியில் உள்ள மட எதிர்ப்பாளர்களுடன் ரகசிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்துவிட்டு மடத்தைச் சூறையாடவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...'' (தினமலர், 14.12.04)

வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி, லாலு பிரசாத், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இவர்களை தலைப்பிலேயே கேவலப்படுத்தி அவமானப்படுத்தி சவடாலாகச் செய்தி வெளியிடும் தினமலர், ஒரு கிரிமினலான ஜெயேந்திரனைப் பற்றி எப்படி பவ்வியமான தொனியில் தலைப்புகள் வெளியிட்டிருக்கிறது பாருங்கள்."ஜெயேந்திரர், கைதுக்கு எதிர்ப்பு. சாதுக்கள் போராட்டம்', "ஆந்திராவில் நாளை 80 லட்சம் பேர் உண்ணாவிரதம்', "ஜெயேந்திரர் கைதால் உலக அளவில் பக்தர்கள் கவலை' ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேட்டி, "சகோதரர்கள், பக்தர்கள் உருக்கமான சந்திப்பு', "வேலூர் சிறையில் ஜெயேந்திரர் சுகவீனம்', "ஜெயேந்திரர் கைதுக்கு சர்வதேச சதி காரணம்' பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு, "வேலூர் மத்தியச் சிறையில் தரையில் உறங்கும் ஜெயேந்திரர்,' "பாம்புகள் நடுவே வாசம்' (பாவம் பாம்புகள்!)இப்படி "தானாடவில்லையம்மா தசையாடுது' என்று படிப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிற தொனியில் செய்தி வெளியிடுகிறது தினமலர்.சரி, மோசடிப் பேர்வழி இந்து மதச் சாமியார் என்பதால் ஒரு இந்துமதப் பத்திரிக்கை மத உணர்வோடு இப்படி செய்தி வெளியிடுகிறது என்று பார்த்தாலும், இதோ இன்னொரு இந்து மோசடிப் பேர்வழியைப் பற்றி அதே தினமலர் எப்படிப் பாய்ந்து பிடுங்குகிறது பாருங்கள்."சாதாரண ஆள் இல்லீங்க இந்த சதுர்வேதி', "பண்ணை வீட்டில் மாயாஜாலம்',"செக்ஸ் சாமியார் சதுர்வேதி சதிராட்டம்' இதுதான் பார்ப்பனிய தர்மம். பார்ப்பனிய ஒழுக்கம் என்பது, அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது; ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதல்ல.

பார்ப்பனியத்தின் இந்த மோசடி அவர்களின் இதிகாச, புராணப் புளுகுகளிலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ""இராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன்'' இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் "ஃபுல் டைம் ஒர்க்' அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன், அந்தக் காலத்து ஜெயேந்திரன் விஜயேந்திரன்.இந்த இந்திரனைத்தான் "தேவர்களின் தலைவன்' என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம். ""எங்களுக்கு மட்டுமே இந்திர சரஸ்வதி என்ற பட்டம் சொந்தமானது'' என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது காஞ்சி மடம்.இந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் கொண்ட ராவணன் அவள் மீது தன் நிழல் கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற காதலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.தினத்தந்தியின் மொழியில் சொல்வதானால் "உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்' என்கிற பாணியில் வாழ்ந்த இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது பார்ப்பனியம்.இவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, ""பார்ப்பõனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை. ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.'' இதுதான் பார்ப்பனிய தர்மம். ஒழுக்கம். இதைத்தான் பார்ப்பனியப் பத்திரிக்கைகளான தினமலர், ஜூனியர் விகடன், துக்ளக் போன்றவை முதலாளித்துவ வடிவத்தில் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சரவணபவன் ராஜகோபாலின் காதலைக் கண்டறிந்து "அவர் கொலை செய்தார்' என்பதைத் துப்பறிந்து வெளியிட்ட பெருமை தினமலர், ஜூனியர் விகடனையே சேரும். தனக்கு "விளம்பரம் தருகிற பார்ட்டி' என்கிற சமரசம் இல்லாமல் உண்மையைத் துப்பறிந்து உலகுக்குச் சொன்னார்கள். (அண்ணாச்சியோ தினகரன், தினத்தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை விட "அவாள்' பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார். அது அவரின் சைவத் தொழிலின் ரகசியம். தனிப்பட்ட லாபத்திற்காகவே பலபேர் பார்ப்பன அடிமையாக இருப்பதின் ரகசியமும் அதுவே. இதில் புதுவரவு "தேவி' வார இதழ்.)ஆனால், "ஜகத்குரு ஒரு ஆளை ஜகத்தை விட்டே அனுப்பிவிட்டார்' என்பதை "நக்கீரன்' துப்பறிந்து தொடர்ந்து எழுதியபோதும் கூட ஜூனியர் விகடன் "துப்புக் கெட்டு'க் கிடந்தது. பிறகு லோக குரு கைதாகி லோல்பட ஆரம்பித்த பிறகே வேறு வழியில்லாமல் "கடவுள்' செய்த கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கியது. அந்தச் செய்திகளை அது இப்படி வரையறுத்துக் கொண்டு வெளியிடுகிறது. "ஜெயேந்திரன் கொலை வழக்கில் சிக்கி இருப்பதற்குக் காரணம் அவர் கொலை செய்ததால் அல்ல, சங்கர மடத்தின் கோஷ்டி தகராறால்' என்கிற பின்னணியில்.இதில் ஜூனியர் விகடன் ஜெயேந்திரன் கோஷ்டி. (இந்து என்.ராம், டி.என். சேஷன் போன்றோர் விஜயேந்திரன் கோஷ்டி.) இந்தக் கொலையில் ஜெயேந்திரனின் பங்கை அரசல் புரசலாக எழுதும் போது கூட, "வாசகர்களுக்கு ஜெயேந்திரன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணுவதுபோல் எழுத வேண்டும்' என்பது விகடன் ஆசிரியர் குழுவிற்கு, ஆசிரியர் இட்ட கட்டளை போலும்!

இதோ கழுகார் சொல்லுகிறார்:""ஜெயேந்திரர் அணி, விஜயேந்திரர் அணி என்று இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக கோலோச்சி வந்த கதை இது. இந்த அணிகள் பரஸ்பரம் குழி பறிப்பு வேலையிலேயே மூழ்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழி பறிப்பின் உச்சகட்டமாகத்தான் இன்று கொலை வழக்கு ரேஞ்சுக்கு அசிங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்."ஜெயேந்திரர் கைதாகி சிறை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் எந்த தங்கு தடையும் இன்றி செயலாற்ற வேண்டும். தேவைப்பட்டால், ஆளும் அரசின் விருப்பங்களையும் சிக்கலில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டது' என்கிறார்கள் இந்த சிலர்!''— இதுதான் ஜெயேந்திரன் வழக்கை ஜூனியர் விகடன் துப்பறியும் பாணி, சீனியர் விகடனும் இதே பாணிதான். அதுதான் ஆளையே மாத்திடும் (பைத்தியக்காரனா மாத்திடும்) ஆனந்த விகடன்!

உதாரணத்திற்கு ஆ.வி.யில் இருந்து ஒரு சில பிட்டுக்கள்:""ஜெயேந்திரரின் ஜாதகக் கட்டங்களைப் புரட்டிப் பார்த்த விசுவாசிகள், புது விஷயம் சொல்கிறார்கள். "பெரியவாளுக்கு எட்டுல சனி, டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் கஷ்டமெல்லாம் பனியாப் பறந்துடும். அவரை இந்தப் பாடு படுத்தறவாளுக்கு வர்ற ஜனவரியிலிருந்து கஷ்ட தசை ஆரம்பம். இன்றையநிலைமை புது வருஷத்தில் அப்படியே தலைகீழாகும்' என்கிறார்கள்.இது எப்படி இருக்கு?இந்தப் பாணியிலேயே எழுதிகிட்டே வந்து, இன்னும் கொஞ்ச நாளில் "சங்கரராமனை ஆள் வைத்துக் கொன்னது அவரு சம்சாரம்தான்'னு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன்னா, அதான் ஆளையே மாத்தற ஆனந்த விகடனாச்சே!

ஜெயா டி.வி.யிலே "அரிகிரி அசெம்பிளி'ன்னு ஒரு அநாகரிகமான நிகழ்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். அந்த அநாகரிகமான நிகழ்ச்சியிலே ரெண்டு பைத்தியங்கள் நிகழ்ச்சி நடத்தியதையும் கவனித்திருப்பீர்கள். அதுல ஒண்ணு மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும். அது பேரு பாஸ்கி. இந்தப் பைத்தியம் ஆனந்தவிகடனில் சோகமான மனநிலையோட ஒரு நகைச்சுவைப் பக்கம் எழுதியிருக்கு. இதோ அது செய்த "ஜாலி கற்பனை':"போலீஸ் விசாரணை' என்கிற பேரில் ஜெயேந்திரர் மீது கேஸ் மேல் கேஸ் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்! போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழேவரும் கேஸ்களில் கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ?!மடத்துக்குத் தேவையான சந்தன சப்ளையில் வீரப்பன் மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரர், வீரப்பனைத் தீர்த்துக் கட்டிவிட்டார் என்கிறது எஸ்.டி.எஃப் போலீஸ்!"ராஜீவ் காந்தியைக் கொன்ற தற்கொலைப் படைப் பெண்மணி தணுவின் கையில் இருந்த பூமாலைகூட ஜெயேந்திரர் வழக்கமாகப் பூ வாங்கும் பூக்காரி தொடுத்ததோ?' என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.இவை தவிர மகாத்மாகாந்தி, ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி போன்றோர் கொல்லப்பட்ட வழக்குகளில் கூட ஜெயேந்திரருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று இன்டர்போல் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி!

இது நகைச்சுவையாம்! இதைப்படிக்கிற சங்கரமட பக்தருக்கு ஜெயேந்திரன் மீது பரிதாப உணர்வு வரும். நமக்கு கோபம் வருகிறது. இந்த எழுத்தை அது "ஜாலியாக கற்பனை' செய்ததாம். இந்த ஜாலியில் பாஸ்கியின் ரத்தக் கண்ணீர் தெரிகிறது.சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், ஆனால் இவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார்.இந்தக் காரியப் பைத்தியம் பாஸ்கி வேறு யாரும் அல்ல. தலைவர் ஸ்டாலினைப் பற்றி கேவலமாக எழுதிய, நம்ம "கக்கா' மதன், அதான் "ஆய்' மதன் இவருக்கு அத்திம்பேர்!

மொட்டைத்தலை என்றவுடன்தான் "சோ'வின் யோக்யதை ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயேந்திரன் கைதில் "சோ' என்ன சொல்லியிருப்பார்? அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே "அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்' என்பது முன் முடிவான ஒன்று. கழுதை வாய்திறந்தால் குயில் போலவா கூவும்?ஆனாலும், துக்ளக்கைப் படிக்கும்போதுதான் ஜெயேந்திரன் கைதில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. அதாவது "சோ'வுக்கு பைத்தியம் பிடித்திருப்பது.சங்கரமடம் அவரின் உயிராக இருக்கிறது. இப்படி ஒரு கைது நடந்திருப்பதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி சோவுக்கில்லை. பதட்டத்தோடு இருக்கிறார். பதட்டத்திலும் அவர் கருணாநிதியை வசைபாடுவதை, பெரியார் கொள்கைகளை திட்டித் தீர்ப்பதை நிறுத்தவில்லை. (பார்ப்பான் பைத்தியக்கார நிலையில் இருந்தாலும் பெரியாரைத் திட்டுவதில் மட்டும் தெளிவு இருக்கும்போல.)ஜெயேந்திரனைக் கைது செய்தது ஜெயலலிதா. சோ திட்டுவது கருணாநிதியை. (சோவிற்கு கடா பல்லில் வலி வந்தால் கூட கருணாநிதி சிரித்து சந்தோசமாக இருக்கிறார், அதனால்தான் எனக்குப் பல் வலிக்கிறது என்பார் போலும்.)"ஜெயேந்திரன் கொலை செய்திருக்கமாட்டார்' என்று உறுதியாக நம்புகிறார். ஆனாலும் "அரசு ஆதாரமில்லாமல் கைது செய்திருக்காது' என்றும் மிரளுகிறார். சோ குழம்புகிற குழப்பத்தில் அவர் மொட்டைத் தலையில் "மயிரே' முளைத்து விடும்போல் தெரிகிறது. அதனாலேயோ என்னவோ அவரின் "கேள்வி பதில்' பகுதி வழக்கத்தைவிட அருவெறுக்கத்தக்க நிலையில் கேவலமாக இருக்கிறது.

வி.எஸ். கவிதா மீனா, செட்டிப்புலமகே: ஜெயேந்திரரை, சங்கரராமன் தொடர்ந்து ப்ளாக் மெயில் செய்து மிரட்டிக் கொண்டே இருந்திருக்கிறாரே! அது குற்றமில்லையா?

ப: பத்திரிகைச் செய்திகளை வைத்துப் பார்க்கிறபோது, சங்கரராமன் செய்தது "கிரிமினல் இன்டிமிடேஷன்' என்கிற குற்றத்திற்கான பிரிவின் கீழ் வரக்கூடிய தன்மை படைத்த செயல் என்று கூறலாம். இதைத் தவிர, வேறு பெயரில் மறைந்து கொண்டு, சம்பந்தப்பட்ட கடிதங்களில் சிலவற்றை எழுதியதால், அது தனிப் பிரிவின் கீழ் வரும். இரண்டுமே குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்திற்கும், இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் சங்கரராமன் உயிருடன் இல்லாதபோது, இது சட்டத்தை அறிந்து கொள்கிற சமாச்சாரமே தவிர, நடவடிக்கை கேட்கிற கோரிக்கை அல்ல.

கொலை செஞ்சதுக்கு என்னய்யா தண்டனைன்னு கேட்டா, இவரு ப்ளாக் மெயிலுக்கான தண்டனையைப் பத்தி எழுதுறாரு. அப்போ சங்கரராமன் என்ன தற்கொலையா செஞ்சிக்கிட்டாரு? சோவின் இந்த வக்கிரத்தைப் படிக்கும்போது நமக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு திரைப்படத்தில் சிவாஜி, சோவைப் பார்த்துப் பாடுவார், ""போட்டாளே, போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே'' என்று. இந்தப் பாடல் சோவின் கதாபாத்திரத்தைப் பார்த்துப் பாடிய பாடலாகத் தெரியவில்லை.ஜெயேந்திரன் கம்பி எண்ணுகிறார்; சோ பைத்தியக்காரனாகி இருக்கிறார். மக்கள் கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். ஒரு சம்பவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை. சிலர் உளறுவார், பலர் மகிழ்வார்.

கடைசியாக ஒன்று: பக்தர்கள் ஜெயேந்திரனை நம்ப வேண்டாத நேரத்தில் நம்பினார்கள். நம்ப வேண்டிய நேரத்தில் நம்ப மறுக்கிறார்கள். ஜெயேந்திரனை நாம் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் இப்போது நம்புகிறோம். அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பார். இன்னும் இதற்கு மேலே பல கிரிமினல் வேலைகளையும் செய்திருப்பார்."அக்கிரகாரத்து அழகிகள்'பார்ப்பனியம் மற்ற சாதிக்காரர்களுக்குச் செய்த தீங்கை விடவும் தன் சொந்தச் சாதிப் பெண்களுக்குச் செய்த தீங்கு சொல்லித் தீராது. விதவைகளை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, உயிரோடு கொளுத்தியிருக்கிறது பார்ப்பனியம். கங்கை நதியின் வற்றாத தன்மைக்குக் காரணம், அதில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட பார்ப்பன விதவைப் பெண்களின் கண்ணீரே என்றாலும் மிகையாகாது.சிறுமிகளை கிழட்டுப் பார்ப்பானுக்கு மணம் முடித்துக் கொடுமைப்படுத்தியது பார்ப்பனியம். பார்ப்பனத் திருமணங்களில் பெண்ணை தந்தை தன் மடியில் உட்கார வைத்துத் "தாரை வார்த்துக் கொடுப்பது' பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கம்தான். சிறுமி மணமேடையில் அமராமல் விளையாட்டுத்தனமாக எழுந்து ஓடி விடாமல் தடுக்க, தந்தை மடியில் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டதனால் ஏற்பட்ட பழக்கம் அது."ஆணுக்குப் பெண் மட்டமில்லை'யென்று பர்ப்பனப் பெண்கள் கருதலாம். உண்மையும் அதுதான். அவர்கள் பிரதமர் பதவியில் கூட அமர முடியும், ஆனால் சங்கராச்சாரியாக முடியாது. ஏன் சங்கர மடத்தில் ஒரு குமாஸ்தா வேலை பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. ""வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்'' என்பது ஜெயேந்திரனின் "அருள் வாக்கு'. பார்ப்பனியம் என்பது மற்ற சாதியினரை மட்டுமின்றி பார்ப்பனப் பெண்களையும் கொடூரமாக ஒடுக்கி வந்திருக்கிறது. இந்தக் கணம் வரை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகத்தான் இருப்பார். இருக்க வேண்டும். இதற்கு மேலும் பார்ப்பனப் பெண்கள் ஜெயேந்திரனுக்காக உண்ணாவிரதமிருந்தால், அவர்களை "அக்கிரகாரத்து அழகிகள்' என்றுதான் அழைக்க வேண்டி வரும்


This page is powered by Blogger. Isn't yours?