<$BlogRSDURL$>

Sunday, January 03, 2010

நன்றி- தேடு ஜாப்ஸ் 



1. Set a right example and be a Leader (Not a Manager)

Always remember that anything and everything what you do is being watched and imitated by your team members.

MBA விலோ அல்லது ஏதோ ஒரு Workshop லோ ஒக்காந்து நல்ல மேனேஜரா இருப்பது எப்படின்னு கத்துக்க முடியாது. நீங்க நல்ல மேனேஜரா இருக்கணும்னா ஒங்களுக்கு ஒரு நல்ல மேனேஜர் அமையணும். அவர் செய்யுறதை காப்பி அடிச்சு அதில் உங்களது ஸ்டைலை சேர்த்தால் நல்ல மேனேஜராக ஆகலாம். அதேபோல, உஙகள் டீமில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்க படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன், எனக்கு
சரியான நேரத்தில் அரவிந்த் என்று ஒரு மிகச்சிறந்த மேனேஜர் அமைந்தார். நான் இன்றைக்கும் Tips தேவைப்படும் போது அணுகுவது அவரைத்தான். ஒரு மேனேஜர் எப்படி இருக்கணும்னு அவரிடமிருந்தும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அதற்கு முன் வேலை செய்த மேனேஜரிடமிருந்தும் கத்துக்கிட்டேன்.

எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்.

2. Call them Colleagues :
அரவிந்திடமிருந்து நான் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.

I hate the word Subordinate.Team Mate அல்லது Colleague என்று அறிமுகப் படுத்துங்கள். யாரையும் இவர் எனக்கு கீழே வேலை செய்கிறார் என்று சொல்லாதீர்கள்.

Be a part of the team as a Leader and don't Boss around. Team Mates அனைவரையும் உங்களை பேர் சொல்லி அழைக்க வற்புறுத்துங்கள். Sir என்று அழைப்பதை தடை செய்யுங்கள். என்னுடைய டீம் மேட்ஸ் என்னை விளித்தது "Hi Sri" என்றுதான். This goes a long way in creating a bondage...

3. Don't give them fish to eat, Teach them how to Fish:

மறுபடியும் அரவிந்த் புராணம். நான் அவரிடம் ஒரு Problem கொண்டு சென்றால் அவர் எப்போதும் சொல்வது - ஸ்ரீராம், Problem இருக்குன்னு மட்டும் சொல்லாதே, அதுக்கு மூணு solution யோசித்துக் கொண்டு வா, அதில் எது சிறந்தது என்று சொல்கிறேன். அப்போல்லாம் எனக்கு பத்திக்கிட்டு வரும், யோவ் எனக்கு மூணு Solution தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வர்றேன்னு கத்தத் தோணும். I realized lot later that he was preparing me to live on my own and not be a Parasite.

Teach them how to fish, if you keep feeding them, they will die of hunger after you...

4. Don't shock them into changes:

மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. When facing change, Communicate as early in the process as possible. Remember that your team mates are a few steps behind you in the acceptance cycle. Give them a reasonable
amount of time to adjust.

எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. Resistance to change ஒருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.


பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.

பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.

2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.

3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:

கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.

4. Exit Interview :

Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.




This page is powered by Blogger. Isn't yours?