Thursday, June 02, 2005
Balumahendra's Interview
===================
அதிக குளிரை அறை முழுக்க நிரப்பிவிட்டு இன்னும் குளிரை அழுத்துகிறது ஏ.சி. ஒரு பைபிள்... சில கவிதைப் புத்தகங்கள். தலையில் இருக்கும் காட்டன் ஜீன்ஸ் தொப்பியும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட முகமும் பாலு மகேந்திராவை இளமையாகக் காட்டினாலும் உடம்பில் தளர்வு தெரிகிறது. ஆவி பறக்க கண்ணாடிக் குவளையில் லெமன் டீ தருகிறார்.
கறுப்பன்கூட சினிமாவில் ஒரு நடிகனா வந்து ஜெயிக்க முடியும்ங்கறதை ரஜினிக்குப் பிறகு எனக்கு உணர்த்தியது தனுஷ்தான். இந்தப் புள்ளையோட (தனுஷை இப்படித்தான் சொல்கிறார்) கண்ல அப்படி ஒரு சக்தி இருக்கு. பார்த்தா ஏதோ சாதாரண நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கார் தனுஷ். கொஞ்சம் கூர்ந்து பார்த்தா ஒரு பிரெஞ்ச் மாடலோட உடலமைப்பு இருக்கு.
‘அது ஒரு கனாக்கால’த்துல சீனுவா நடிச்சிருக்கார் தனுஷ். சீனு பேச விரும்பற விஷயங்களையெல்லாம் அவனோட கண்ணே பேசிடும். மனசோட தவிப்பை, காதலை, கண்ணால் பேசியிருக்கிறார் தனுஷ். தன் மகனுக்கு பெஸ்ட்டா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற தகப்பன், தன் மகனுக்காக ஒரு முடிவெடுக்கிறான். ஙிமீst ஷீயீ மிஸீtமீஸீsவீஷீஸீ-என்று சொல்வோம் இல்லியா, அது மாதிரி! ஆனால், அந்த முடிவு தன் மகனை எப்படியெல்லாம் சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கிறது என்பதுதான் ‘அது ஒரு கனாக்காலம்’. இந்தப் படத்துக்குக் கதை சொல்ல நான் நம்பியது நான்கு கண்களை. இரண்டு தனுஷோடது. இரண்டு ப்ரியாமணியோடது.
நம்ம தமிழ்ப் பொண்ணுங்க கேமராவிலும், கேமராவுக்கு வெளியிலும் பேரழகிகள்தான்ங்கிறதை ப்ரியாமணி நிரூபிக்கிறாங்க. மேக்&அப் இல்லாத முகத்திலும் அந்தப் பொண்ணு அத்தனை அழகு! ஒரு நாள் ஷ¨ட்டிங் ஸ்பாட்ல வெச்சு, Ôநீங்க சினிமாவுக்கு வரலைன்னா என்னவா இருப்பீங்க?Õனு என்கிட்டே அந்தப் பொண்ணு கேட்டுச்சு. ‘வாத்தியார் ஆகியிருப்பேன்Õனு சொன்னேன்.
இன்றைக்கும் விசிட்டிங் லெக்சரரா பல காலேஜுக்கும் போறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் என்னோட அலுவலகத்தில் சினிமா பற்றி மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கறேன். அப்புறம் ரொம்பச் சந்தோஷமா இருந்தா நானே சமையல் செய்து எல்லோ ருக்கும் பரிமாறு கிறேன். நல்ல சமையல்காரன்தான் நல்ல கிரியேட் டரா இருக்க முடி யும்னு நம்ப றேன். ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன்.
கடற்கரையோரமாக எங்க வீடு. கடலில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் எங்க சமையலில் வறு படும். கடல்காற்று, உப்பு, உணவுன்னு வாழ்ந்தோம். அப்பா பாலநாதன் பௌதிகப் பேராசிரியர். நல்ல சுதந்திரம் தந்தார். அப்பாவை மாதிரியே வாத்தியாராகணும், அம்மாவை மாதிரி விதவிதமா சமைக்கணும்னெல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். இப்பவும் ஒவ்வொரு தடவை பிளாக் டீ குடிக்கும் போதும் அம்மாவோட ஆக்சிஜன் அதுல இருக்குன்னு நம்பறேன். ஏன்னா... கசக்குற தேநீரை குடிக்கப் பழக்கினது அம்மாதானே! வாழ்க்கையிலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு!
என் பையன் (இயக்குநர்) பாலா என்னைப் பார்க்க அடிக்கடி வர்றான். உடம்பு சரியில்லாம இருந்தப்போ உதவி பண்ணட்டுமானு அன்பா கேட்டான்! அன்பு காரணமா ஒரு பொஸசிவ் வரும்ல... அப்படி ஒரு சங்கடம் எனக்கும் அவனுக்கும். காலம் அதைத் துடைச்சுத் தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. பாலா யாரு... பாலுமகேந்திரா யாரு? ஒவ்வொருத்தருக் குள்ளேயும் ஒளிஞ்சிக் கிட்டிருக்கிற ஒரு கர்வம்... திமிர்தானே! இந்திய சினிமாவுக்குப் பாலாங்கிற அற்புத இயக்குநர் கிடைச்சிருக்கார். அது சந்தோஷமா இருக்கு. ஏன்னா, பாலாதான் நான் என்றபடி பெருவிரலை மூக்கில் வைத்து நீண்ட மௌனத்துக்குப் பிறகு,
‘‘எனக்குனு சில ஆசைகள் இருக்கு. ஆண்டவ னோட அனுக் கிரஹத்துல ‘அது ஒரு கனாக்காலம்’ நல்லா வந்திருக்கு. அதிலே இசை ஞானி இளையராஜா ஒரு பாட்டு தானே எழுதி பாடி இருக்கார்.
Ôகாட்டு வழி கால்நடையாய் போறதம்பி!
\ பொழுதாகு முன்னே போற எடம்சேர்ந்துவிடு &
காலையிலே எளவெயிலு கடுமையில்லே! & ஒங்காலடியில் எடுத்துவச்சாக் கவலயில்லே!Õ
இப்படிப் பொழுதெல்லாம் கேட்கிற மாதிரி நான்கு பாடல்கள் நல்லா வந்திருக்கு.
அது ஒரு கனாக்காலத்துக்குப் பிறகு இன்னும் மூன்றே மூன்று சினிமா எடுக்கணும். அதில் முக்கியமானது & ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
திரையுலகில் என் இறுதி ஆசை இதுதான். ஆண்டவன் அதுவரை என்னை உயிரோடு விட்டு வைத்திருந்தால் போதும். ‘இறைவா! நான் நேசித்த சினிமாவையும் என்னையும் பிரித்து விடாதே. என்னை வாழவிடு!’ என்பதுதான் என் பிரார்த்தனை. அவ்வளவுதான்!ÕÕ என கலங்குகிறார் பாலுமகேந்திரா.