Saturday, October 15, 2005
"இந்த மண்ணில் உன்னதம் எதுவும் முளைக்காது, என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக் கிடந்த சமூகங்கள் மிகக் குறுகிய காலப்பொழுதில் அறிவின் கூர்மைகளோடும், கலைகளின் வீச்சுக்களோடும் சிலிர்த்துக் கொண்டு எழுந்து வந்திருக்கின்றன. இது போன்ற கலை எழுச்சிகளையும், அறிவுப் புரட்சிகளையும் சரித்திரங்கள் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றன. அங்கு பள்ளங்கள் நிரம்பி அவற்றின் மீது கோபுரங்கள் எழுந்திருக்கின்றன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு உன்னதம் சாத்தியம் என்றால் அதே உன்னதத்தை இங்கும் எழுப்பிக் காட்ட முடியும். நமக்குக் கனவுகள் வேண்டும். அந்தக் கனவுகளை மண்ணில் இறக்க அசுர உழைப்பு வேண்டும். பரஸ்பரம் தொடை தட்டிக் கொள்வதை விட்டு, ஆக்கத்தை நோக்கி நகரும் மன விகாசம் வேண்டும். பொது எதிரிகளைக் கிழிக்கும் நெஞ்சுரம் வேண்டும். சவால் வேண்டும். தீர்க்கதரிசனம் வேண்டும். அப்போது இங்கும் பள்ளங்களை நிரப்ப முடியும். கலைக் கோபுரங்களையும் எழுப்ப முடியும்"
சுந்தர ராமசாமி, "விரிவும் ஆழமும் தேடி"
சுந்தர ராமசாமி, "விரிவும் ஆழமும் தேடி"