Thursday, December 29, 2005
நண்பர் ரவிசங்கர் "படிச்ச நாயே கிட்ட வராத" என்ற புதுப்பேட்டை பாடலுக்கு தன் கண்டனத்தையும் கருத்துக்களையும் தெரிவித்தார். இதில் ஒன்றும் பெரியதாக தவறு இருப்பதாக தெரியவில்லை. படித்தவர்கள் என்பதால் கொம்பாக முளைத்திருக்கிறது. வேண்டாம் கொம்பு என்றால் இங்கே சுஹாசினி போல வேறு வழக்குகளை சந்திக்கும் அவநிலைக்கு உள்ளாவேன் ;) நாம் கூடதான் ரோட்டில் போகும்போது குறுக்கே வரும் நபர்களை "நாயே" என்று சொல்வதுண்டு. அதுப் போல தான் இதுவும். வன்முறையின் கிளர்ச்சியில் இருப்பவர்களுக்கு படித்தவர்கள் நாய்களாக தான் தெரிவார்கள். இளரத்தம். ஆயத பலம். வன்முறையின் மீதுள்ள காதல். அது அப்படிதான் வெளிப்படும்.
புதுப்பேட்டை சென்னையின் நிழலுக இடங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். செல்வராகவன் - யுவன் - நா.முத்துக் குமார் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். இது நான் நினைப்பதுப் போல எடுத்திருந்தால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது ஒரு cult படமாகும் வாய்ப்புகளதிகம். தமிழ் சினிமாவில் நிழலுகம் பற்றிய படங்களும், விவரணைகளும் குறைவு. செல்வராகவன் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையில் எனக்குத் தெரிந்த நிழலுகம் பற்றிய ஒரு சின்ன ப்ரைமர். படம் வந்து பார்க்கும் போது உபயோகமாக இருக்கும். இது தாண்டி, இந்த பதிவினை எழுத தூண்டியது கமல் அட்டகாசமாக பாடியிருக்கும் "நெருப்பு வாயினில் ஒரமாய் எரியும்" என்கிற பாடல், நிழலுகம் பற்றிய அற்புதமான ஆவணம்.
நான் வாழ்ந்த இடம் கொண்டித்தோப்பு, வடசென்னை. தாதாகள், ரவுடிகள், வன்முறையின் மீதுள்ள கிளர்ச்சியும், கவர்ச்சியும் கொண்ட மனிதர்கள் என City of God இல் வரும் ரியோடி ஜெனிரோ குப்பம் போல இல்லையென்றாலும், மக்கள் திராவிட அரசியல் பேசிக் கொண்டு, லுங்கியினை மடித்துக் கட்டிக் கொண்டு, நாற்றமும், பூக்காரிகளின் அழைப்பும் (இன்னா, பூ வாங்கினு போயேன் கண்ணூ ) கெட்ட வார்த்தைகளின் சகிதம் (நிறைய பேருக்கு '...த்தா' இல்லாமல் பேச வராது) வாழ பழகிய இடம். உண்மையான ரியோ டி ஜெனிரோ காண, பேசின் பிரிட்ஜ் தாண்டி இடப்புறம் திரும்பி வியாசர்பாடி பாலத்தில் இறங்கி கொஞ்சமாய் பாலத்திற்கு முன்பே வலப்புறம் திரும்பி போனீர்களேயானால் மகாகவி பாரதி நகரின் (என்ன அருமையான பெயர்!) ஹவுஸிங் போர்ட்டினையொட்டி குடிசைகளும், சாக்கடைகளும் நிரம்பி இருக்கும். எனக்கு தெரிந்த அச்சு அசல் ரியோ அதுதான். தெரு நடுவில் சர்வசாதாரணமாக உயரமான ஸ்டூல்களில் கேரம் போர்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். தூக்கி மடித்துக் கட்டிய லுங்கியுடன் அவர்களின் விரல்கள் விளையாடும். எனக்கு தெரிந்த நிழலாளிகள் ஒரே ஷாட்டில் மூன்று காய்கள் வரை போடுமளவிற்கு திறன் வாய்ந்தவர்கள். கேரம் போர்டு தரையென்றால், காற்றாடி மிக முக்கியமான பொழுது போக்கு. காற்றாடி அறுந்து விழுந்தால், எதிராளி அறுத்தால் அரிவாள் வெட்டு வரை போவது எல்லாம் சகஜம். காற்றாடிக்காக இரண்டு குப்பங்கள் அடித்துக் கொள்வதெல்லாம், கடலோர சென்னை குப்பங்களில் மிக சகஜம். அடியென்றால், ஆட்களை கொல்வது வரை போகும். கடவுள் பக்தி அதிகம். எல்லா இடங்களிலும், அம்மன் கோவில்களோ, மேரி மாதா சிறுகோயில்களோ பார்க்க முடியும். 'டாஸ்மாக்குகள்' வருவதற்கு முன்பு சென்னையில் ஒயின் ஷாப்புகள் தான். மூன்று மானிட்டர் உள்ளே போனவுடன், பியர் சாப்பிட வந்திருக்கும் எங்களுக்கு அறிவுரை சொல்லும் நடுத்தர வயது தாதாக்கள் (" இன்னாடா, இந்த வயசுல தண்ணியா, போய் படிங்கடா, நாதாரிகளா") , "ரா"வாக அடிக்கிறேன் பேர்வழி என்று குடித்து ஆண்மையை நிருபிக்கும் இளம் (budding) நிழலாளிகள் ஒரு புறம், "மச்சான், சீதாக்காவோட புருசன் ஒடிட்டானேமே, மசியுமா மாமே" என வாழ்வியல் கவலைகளோடு சாமான்களை டேபிளில் பரப்பி வைத்து குடிக்கும் நிழலாளிகள் என்று கலவையாக வாழ்க்கை மறுவாசிப்பு செய்யப்படுவதை கண்ணார பார்த்திருக்கிறேன்.ஸ்டான்லி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கல்லூரியில் படிக்கும் போது சேவை செய்து கொண்டிருந்தேன். இடக்கையினை வலக்கையில் தூக்கிக் கொண்டு ஒடிவந்த ஒருவன் "சிலிப்பாயிருச்சி. தவறி வூந்துட்டேன் சீட்டு கொடுரா" என்று கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. அது காற்றாடியால் வந்த சண்டையில் வாங்கிய வெட்டு. ஒரு கையினன வெட்டி விட்டார்கள். காத்தாடி, மாஞ்சா, பாட்லோடு, பிரியாணி, பீடி, கால்வாய், கேரம் போர்டு, டீ, கஞ்சா, டப்பா சோறு, தண்டல், சாராயம், வாந்தி, பீ நாற்றம், 'அத்து விடுதல்', தகராறு, கானா பாடல்கள், டாடா சுமோ என்று அவர்களின் உலகம் தனியுலகம். அவர்களின் அகராதியில் இருக்கும் சொற்கள் பொது வழக்கில் நீங்கள் கேள்விப்படாத சொற்களாக இருக்கும். ஐஸ் பிரியாணி என்றால் என்ன தெரியுமா? பழைய சோற்றில் கஞ்சி ஊற்றி வெங்காயமோ, ஊறுகாயோ வைத்து கொடுத்தால் அதுதான் ஐஸ் பிரியாணி. இதில் லேட்டஸ்டாக, செல்போன், ஏதேனும் ஒரு ஜாதி கட்சியின் / நட்சத்திர கும்பலின் செயலாளர் பதவி (தலித் / யாதவ / அம்பேத்கார் இளைஞர் பேரணி / பரமசிவன் அஜீத் ரசிகர் மன்றம் / சீயான் விக்ரம் ], கொஞ்சம் ரத்ததானம், முப்பத்து ஏழாவது பிறந்தநாளுகான சுவரொட்டி [கொள்கை வேந்தர், ஏழைகளின் ஏர்முனை, தொழிலாளிகளின் தோழன் ] போன்றவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் போல் நண்பர்களுக்கு உதவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் அது கிளிஷேவாகிவிடும். ஆனால் உண்மை. ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவை என்று சொன்னபோது ஒரு பெரும்தலைவரின் பிறந்தநாள் அதுவுமாய் குடிக்காமல் இருந்து, மறுநாள் வரை காத்திருந்து 7 பேர்கள் ரத்தம் கொடுத்து, பின் குடிக்க போனது தனிக்கதை. பார்க்க முரடாய் இருக்கும் நபர்கள், அருகில் நெருங்கி பார்த்தால் உள்ளே அமைதியை விரும்பும் நபர்கள். இன்றும் எம்.ஜி.ஆரினை நினைவு வைத்துக் கொண்டு, பிறந்த நாள், இறந்த நாள், ரிக்சா வழங்கிய நாள் என்று ஒவ்வொன்றையும் கொண்டாடுபவர்கள் அவர்கள் தான். இன்னமும் நிறைய இடங்களில் 'டெல்லி செட்' டேப் ரிகார்ட்டர்களில், டி.எம்.எஸினையும், சிதம்பரம் ஜெயராமனையும் அங்கே தான் கேட்க முடியும். எப்.எம்களில் அல்ல. வெற்றிலை பாக்கு கூட போடாமல் இருக்கும் நிழல் நபர்களை எனக்கு தெரியும். அவர்களை பேருந்திலோ, வேறு நிகழ்விலோ பார்த்தால் அவர்கள் நிழல் நபர்கள் என்று சொல்ல தோன்றாது.உண்மையில் ஒரு ரவுடியாக இருப்பதற்கு நிறைய 'தில்'லும், நெஞ்சழுத்தமும் வேண்டும். நான் பார்த்த முக்கால் வாசி நிழலாளிகள் லேசாக தாங்கி தாங்கி அல்லது ஒரு பக்கம் சாய்ந்து தான் நடப்பார்கள். போலிஸ் ஸ்டேஷனில் 'லாடம்' கட்டியதின் விளைவது. லாடம் கட்டுதல் என்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும்,நிழலாளிகள் அசாதாரணமான தாங்கு சக்தி உடையவர்கள். லாக்கப்பில் மூன்று காவலர்கள் மரண அடி அடிக்க, நான் திருடவில்லை, அடிக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டு, வெளியே வந்து டிஞ்சர் போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே "த்தா, நான் தான் போட்டேன் மச்சான். ஒவரா துள்ளினான், சொருவிட்டென்" என சர்வசாதாரணமாக சொல்லும் மனிதர்களை கண்ணருகில் பார்த்திருக்கிறேன்.ஆயுதங்களுக்கு நிழல் மொழியில் "சாமான்", "பொருள்", "மேட்டர்" என்று பல பெயர்கள். 'சாமானோட கிளம்பு மாமே' என்றால், ஆயுதம் எடுத்து ஒரு சண்டைக்கு தயாராகு என்று பொருள். தென்தமிழகத்தில் தான் அரிவாளை சட்டைக்கு பின்புறம் வைப்பார்கள். அப்புறம் பொறுமையாய் பின்னாடியில் இருந்து தமிழ் சினிமா ஹீரோக்கள் நெஞ்சுக்கு நேரே பிடிப்பார்கள். இங்கே, வடசென்னையில், லுங்கியின் வலப்பக்கத்தில் வைப்பார்கள். லுங்கியின் இடுப்புக்கு மேலே கைப்பிடியும், கூரான பகுதி தொடைக்கு வெளியே இட/வலப்புறத்திலோ இருக்கும். சண்டை என்று வந்துவிட்டால், லுங்கியினை இறக்கி கட்டினால், கையில் அரிவாளோ, கத்தியோ வந்துவிடும். ஒரே போடு, ஆள் காலி. இரு குழுக்களுக்கு இடையே சில சமயங்களில் சமரச பேச்சுக்கள் நடக்கும். 'காம்பரமெய்ஸ்' அல்லது 'பேசி முடிச்சிக்கலாம்' என்று பொருள். இந்த காம்பரமெய்ஸ் பேசும் போதெல்லாம், முதலில் இரு அணியினரும் அணைத்துக் கொள்வார்கள். இது பரஸ்பர மரியாதை இல்லை. லுங்கியின் இடையில் ஆயுதம் இருக்கிறதா என்று கேட்காமல் அறிந்துக் கொள்வது. [என்ன பண்பாடுய்யா இது! ஒரு பயலும் நிழலுலக பண்பாட்டில் முனைவர் பட்டம் செய்ய மாட்டேன்கிறார்கள்!]தமிழ் சினிமாவில் வருவது போல அடியாட்கள் தெளிவாக பின்னாலெல்லாம் வந்து நிற்க மாட்டார்கள். ஒரு நிழல் நபர் ஒரு தெருவில் இருந்தால், தெரு முனையிலுள்ள டீக்கடையில் அவனுடைய ஆட்கள் மூன்று பேர்கள் இருப்பார்கள். தெருவிலிருக்கும் சைக்கிள் கடையில் ஒருவன் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பான். யாராவது இரண்டு பேர்கள் தெருவில் உலாவிக் கொண்டிருப்பார்கள். முட்டு சந்தாயிருந்தால், குட்டி சுவற்றில் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். நிழலாளியிடம் ஆயுதம் இருக்காது, மற்றவர்களிடத்தில் இருக்கும். ஒரு தெருவில் நுழையும் போதே, பரிச்சயம் உள்ளவர்களால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.ஒரு தனி நபரையோ, கூட்டத்தையோ 'போட்டுத் தள்ளு'வதற்கு பெயர் 'ஸ்கெட்சு'. ஸ்கெட்சு போட்டாச்சு என்றால், வளைத்தாகிவிட்டது என்று பொருள். நிழல் உலகம் என்பது சும்மா கத்தி தூக்கவதற்கு மட்டுமல்ல. கூர்மையான அறிவு வேண்டும். ஒரு கூட்டத்திலோ, கடைத்தெருவிலோ எதிராளியை அடையாளம் காணும் திறன் வேண்டும். ஒரு assignment செய்ய வேண்டுமென்றால் தூங்காமல் அந்த நபரை பின்தொடர வேண்டும். நபரின் எல்லா உறவுகளையும், பழக்கவழக்கங்களையும் நுண்ணியமாக கண்காணிக்க வேண்டும். கத்தியோ, அரிவாளோ தூக்குபவரெல்லாம் நிழலாளியாக முடியாது. ஸ்கெட்சு போட்டாகிவிட்டால், அதனை நடைமுறைப்படுத்த பல்வேறு மக்களை இணைக்கவேண்டியிருக்கும். நம்மவரில் கமல் ஒரு ப்ளேடு வாங்கி, விரலிடுக்கில் வைத்திருப்பார். இங்கே அதேயே இன்னும் கொஞ்சம் உள்ளேப் போய், ப்ளேடினை துகளாக்கி, பான் பராக், பீடா சகிதம் வாயில் அடக்கிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் இதற்கு 'மாஷ்' என்று பெயர். மாஷா இருக்கேன் என்றால் பேசாதே என்று பொருள். அதாவது, உமிழ்நீரை தேக்கி, எதுவும் முடியாத பட்சத்தில், வாயிலிருக்கும் துகள்களையும் பான்பராக்கையும் ஒருசேர எதிராளியின் மீது துப்பினீர்களேயானால், முகமெங்கும் கிழித்து விடும். படு அபாயகரமான விஷயம், வாயில் துகள்கள் இருப்பது. ஆனாலும், அதையும் செய்யும் நிழலாளிகள் இருக்கிறார்கள். ஒரு ஸ்கெட்சு முடிந்தால் அந்த கூட்டத்தினையே ஆறு மாதம் பார்க்க முடியாது. எங்கேனும் போய்விடுவார்கள். ஆனாலும், அந்த வலைப்பின்னலும் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருக்கும். படிக்க சுவாரஸ்யமாகவும், திரிலிங்காகவும் இருக்கும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் படு மோசமாக இருக்கும்.வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ முடியாது. ஒரே தெருவில் உங்களால் பாதிக்கப்பட்டவனும் நீங்களும் இருப்பீர்கள். அவன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருப்பான். தூக்கம் வராது. தூங்க முடியாது. மிதமிஞ்சி குடித்தால் தான் நிதானமாக இருக்க முடியும். 'பாங்' இல்லாமலோ, 'கிராஸ்' இல்லாமலோ வாழ பழகுதல் கடினம். சாதாரணமாக இருந்தால், நினைவுகளும், கற்பனைகளுமே உங்களை பைத்தியம் பிடிக்க வைத்து விடும். எங்கேயும், பாத்ரூம் போனால் கூட தனியே போகமுடியாது. காதலிக்க முடியாது. எதிராளி பார்த்தால், உங்கள் காதலி நாசமடைவாள் அல்லது அவளை மிரட்டி, உங்களை அழைக்க வைத்துப் போட்டு தள்ளி விடுவார்கள். பொண்டாட்டியோடு படுக்கும் போது கூட கதவுக்கு வெளியே இரண்டு பேர்கள் உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார்கள் என்று சொன்னால், அது தான் உண்மை. போலீஸுக்கு மேலிடத்திலிருந்து 'அழுத்தம்' வந்தால் எந்நேரமும் உங்களை என்கவுண்டரில் போட்டு தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் உங்களோடு பிரியமாய் இருப்பதுப் போல நடிப்பார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நேராக பார்க்க மாட்டார்கள். நள்ளிரவு சந்திப்புகள் மட்டுமே நடக்கும். கூட இருக்கும் ஆட்களை கட்சி மாறி, குரூப் மாறி காட்டிக் கொடுப்பார்கள். போட்டு தள்ளுவார்கள். ராயபுரத்தில் ஒரு பெரும் மதிமுக பிரமுகர் *(முன்னாளைய நிழலாளி) காலையில் வாக்கிங் போகும் போது நடுரோட்டில் கழுத்து திருகப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் எப்போது எடுக்கப்படும், போகும் என்று தெரியாது. யாரையும் நிரம்ப நெருக்கமாகவோ, நிரம்ப தொலைவிலோ வைக்கக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செல்போனோ, தொடர்புகளேயோ மாற்ற வேண்டியதிருக்கும். மக்களோடு மக்களாய் உலவ முடியாது. அடிதடியோடு இருக்கும்வரை தான் மரியாதை. மீண்டும் மீண்டும் அங்கிருந்து வெளியே வராமல் தவிக்கும் நிறைய நபர்களுக்கான காரணங்கள் தான் இவை. அபூர்வமாக வெகு சில நபர்கள் அங்கிருந்து வெளியே வந்து பெரிய வணிக நிறுவனங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். [சென்னையில் ஒடும் கால் டாக்சிகள், துறைமுகத்தில் பொருட்களை ஏற்றி, இறக்கும் ஒப்பந்தம், எண்ணூர் நாராயணணுக்கு சொந்தம். போரூர் ராமசந்திரா மருத்துவமனை, ஹாட் சிப்ஸ் உணவகங்கள், நிறைய கல்யாண மண்டபங்கள் உடையாருக்கு சொந்தம் [உடையார் சென்னையில் 1980களின் பிற்பகுதியில் மிகப் பெரிய தாதா]. ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் டிரேடர்ஸ் ஜந்து நட்சத்திர ஹோட்டல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தம் (எம்.ஜி.ஆர் காலத்தில் மிகப் பெரிய கட்டப்பஞ்சாயத்து நபர்)]ஆனால் இவை அபூர்வம். பெரும்பாலும், வாழ்க்கை எங்கே தொடங்கினீர்களோ அங்கேயோ முடிந்து போகும். வடசென்னையில் இருக்கும் போது பார்த்த ஒரு மரணம் மறக்க முடியாதது. வெறும் 20 பேர்கள் மட்டுமே, என் தந்தை உள்பட போன அந்த சவ ஊர்வலம், 1950-60களில் வடசென்னையினை தன் கையில் வைத்திருந்த ஒரு முன்னோடி தாதாவின் சவ ஊர்வலம். தன் பின்னாட்களில் ஒன்றுமில்லாமல், மோசமான நிலையில், மனநிலை பாதிப்படைந்து இறந்து போனார். வாழ்க்கை அவ்வளவுதான். கூட்டமாய் இருக்கும் போது உரத்து பேசினாலும், தனியே இருக்கும்போது ஒண்ணுக்குப் போக கூட பயந்து சாக வேண்டியதிருக்கும். நிழலாளியாய் துடிப்பாய் இருக்கும் போது இருக்கும் கவர்ச்சியும், கிளர்ச்சியும், கத்தி பிடிக்கும் போது இருக்கும் தைரியமும் வாழ்நாள் முழுக்க வாராது. நாற்பது வயதிற்கு மேல் நீங்கள் ஒரு குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஐம்பதாவது வயதினை பார்க்க மாட்டீர்கள். யாராவது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அடையாளம் தெரியாத பிணம் கூவத்தில் கரை ஒதுங்கியது என்று தினசரியில் ஒரு பெட்டிச்செய்தியில் வாழ்க்கை முடிந்துவிடும். ஒரு முறை கத்தி தொட்டிர்களேயானால் முடிந்தது கதை. வேறு எதாவது மாநிலமோ, நாடோ போனாலேயொழிய தப்பிக்க முடியாது. அதுவும் உத்தரவாதமில்லை (உ.தா. சோட்டா ஷகில், அபு சலீம் )ஹிந்தியில் சத்யா, கம்பெனி, சமீபத்தில் வந்த சர்கார், அபஹாரன் போன்ற நிழலுகத்தினை மையமாக கொண்ட படங்கள் அதிகம். தமிழில் மிகக் குறைவு. தொட்டி ஜெயா போல அடியாட்கள் படங்கள் வந்ததுண்டு. முழுமையான நிழல் உலகப்படங்கள் மிகக்குறைவு. 'ஆறு' படம் அந்த மாதிரி பின்புலம் தான் என்றாலும், த்ரிஷா போன்ற பெண்கள் ஒரு ரவுடியினை காதலிப்பது என்பது 'புதியபாதை' காலத்திய சரக்கு. புதுப்பேட்டை பட ஸ்டில்களைப் பார்த்தால், கொஞ்சம் விஷய ஞானத்துடனும், யதார்த்துடனும் வெளிபடும் என்று தெரிகிறது. ஆ.வி. பேட்டியில் செல்வராகவன் இதை சொல்லியிருக்கிறார். தென்சென்னை, அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்களுக்கான பிரைமர் இது. இதன்மூலம் படம் பார்க்கும்போது தேவையில்லாமல் சில விஷயங்கள் நடக்காது, சாத்தியமில்லை என்று ஒதுக்கி தள்ளாதீர்கள். இதில் நான் சொன்ன விஷயங்கள் வரவில்லையென்றாலும், ஒரு வரலாற்று ஆவணமாக இதை படித்து உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது எதிர்கால சந்ததிகளுக்கு வடசென்னை நிழலுலகம் எப்படி இருந்தது என்பதை விளக்கவாவது பாதுகாப்பாய் ஒரு குறுந்தகட்டில் எழுதி, புதைத்து விடுங்கள். நமக்கு பின் வரும் சந்ததிகள் படித்து தேர்ச்சி அடையட்டும் : )))))))))முக்கிய பின்குறிப்பு: இதை எழுதுவதால் செல்வராகவன் எதுவும் எனக்கு பணம் தரவில்லை என்பதை சத்யம் திரையரங்கு பார்க்கிங் டிக்கேட்டின் மீது அடித்து சத்தியம் செய்கிறேன்.
* அந்த பிரமுகர் ஏழுமலை நாயக்கர். சென்னையின் அத்தனை தாதாகளுக்கும் அண்ணன். என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வீரமணி இவரின் சிஷ்யன்
நன்றி : நாராயணன்