Thursday, February 22, 2007
Sujathoughts
திருவரங்கத்தில் வசிக்கும் என் தம்பி எஸ்.ராஜகோபாலன், தான் படிக்கும் நல்ல கட்டுரைகளை எனக்குத் தவறாமல் அனுப்புவார். இந்த முறை ‘டைம்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றை அனுப்பியிருந்தார். உள்ளுணர்வு, மூளையின் வரைபடம், மூளை எப்படித் தீர்மானிக்கிறது... இது போன்ற விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள்.
100 பில்லியன் நியூரான்கள் சேர்ந்து ‘நான் இருக்கிறேன்’ என்கிற உள்ளுணர்வை எப்படி ஏற்படுத்து கின்றன என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்காக நவீன ஸ்கேன் முறைகளைப் பயன்படுத்தும்போது, சில ஆச்சர்யமான முடிவுகளுக்கு வந்திருக்கி றார்கள்.
தெரிந்த ஓர் இடத்தையோ முகத்தையோ கற்பனை செய்யும்போதும், அதே இடத்தை நேரில் பார்க்கும் போதும் அதே நியூரான்கள் இயங்குகின்றனவாம். இதிலிருந்து எண்ணம் என்பதும், செயல் என்பதும் மூளைக்குள் தொட்டுக்கொள்கின்றன என்பது தெரிகிறது.
உள்ளுணர்வு என்பது என்ன? நான் என்றால் என்ன? பச்சை, நீலம் என்பதெல்லாம் நிறங்கள். அந்தப் பச்சைத் தன்மை அல்லது நீலத் தன்மை என்கிற சமாசாரம் மூளையில் எப்படிப் பதிவாகியிருக் கிறது? பச்சையைப் பார்ப்பதும் அதைக் கற்பனை செய்வதும் ஒன்றா, வேறு வேறா?
100 பில்லியன் நியூரான்கள் மூளையில் உள்ளன. அவை அனைத்தும் தம்முடன் இணைந்து, பின்னிப் பிணைந்து இருக்கும் அந்த ஒரே ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டில்தான் நீங்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறீர்கள். மூளையில் சந்தோஷம், நிம்மதி போன்ற உணர்ச்சிகளை விளைவிக்கும் நியூரான் பிரதேசங் களை எஃப்.எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் கண்டறிய முடிகிறது. இப்படி மூளையின் பல பேட்டைகளை சிந்தாதிரிப்பேட்டை மாதிரி மேப் வரைந்திருக்கிறார்கள்.
புத்த பிட்சுக்களைக்கூட ஸ்கேன் பண்ணியிருக்கிறார்கள். 10,000 மணி நேரம் தியானத்தில் இருக்கும் புத்த பிட்சுக்கள் தங்கள் மூளையின் நிம்மதிப் பிரதேசங்களை அதிகரித்துக்கொண்டு இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.
ஒரு நிமிஷத்துக்கு 750 மில்லி ரத்தம் பாயும் மூளையில் ஏற்படும் டென்ஷன் நிறைந்த வாழ்வில், மன அழுத்தத்தைக் குறைக்க ஏழு எளிய வழிகள் உள்ளன.
1. நீண்ட மூச்சு விடுங்கள்.
2. விடுமுறையில் செல்லுங்கள்.
3. நண்பர்களை அதிகரியுங்கள்.
4. தவறாமல் தேகப் பயிற்சி செய்யுங்கள்.
5. பழம் சாப்பிடுங்கள்.
6. சீக்கிரம் தூங்குங்கள்.
7. பிடித்தமானதைச் செய்யுங்கள்.
Thanks : vikatan