Sunday, May 04, 2008
மன்ற விழா - 2008
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்
நான் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் என்கின்ற இந்த தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் இந்த வருடத்தைய தலைவராக இருக்கிறேன்.
முதலில் எங்கள் குழுவினரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
மூர்த்தி - எங்கள் அனைவருக்கும் மூத்தவர் - வயதிலும் குணத்திலும், குறும்பிலும். போன வருடத்தின் தமிழ்தலைவராக இருந்தவர். கடந்த பலவாரங்களாக இவரை எங்கு பார்த்தாலும் டிக்கெட்டும் கையுமாகத் தான் பர்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் பையனும், மனைவியும் வேறு ஏதாவது கேட்டால் கூட உடனே டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறாராம். தமிழார்வம் உள்ள இந்த தஞ்சாவூர்க்காரர் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஏராளமானவர்க்கு உதவுக் கொண்டிருக்கிறார்
சங்கீதா - இவர் எங்கள் செயலாளர். வீடு, அலுவலகம், தமிழ்மனறம் என்று எல்லா இடத்திலும் சுற்றிக் கொண்டு எல்லா இடத்திலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் ஒரு கலக்கல் பெண்மணி. இவரை நாங்கள் கேள்வியின் நாயகி என்போம் - இவர் கேள்விகள் உருவாக்குகிற புயல்கள் கடைசியில் நன்மையிலேயே முடியும்- நாரதர் கலகம் மாதிரி. தூங்கி வழிபவரை உட்காரச் சொல்வார். உட்கார்கிறவரை எழ்ச் சொல்வார். பிறகு நடக்கச் சொல்லவும், பிறகு ஓடவும் சொல்வார். மொத்தத்தில் தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
ரூபன் - எங்கள் பொருளாளர். குழுவின் குறுமுனி. கொஞ்சம் பேசாமுனியும் கூட. காரியம் கச்சிதம். ரஜினி மாதிரி டிக்கெட் விறபனையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர். இந்த விழாவின் நாயகர், நாற்காலிக் காரர் - சேர் பர்சன். கடுமையான உழைப்பாளி. மொத்தத்தில் சைலண்ட் பாம்.
அனுப்ரியா - இஅவருக்கு அறிமுகம் கொடுப்பது திருப்பதிக்கு லட்டு கொடுப்பது மாதிரி. பல வருடங்களாக மன்ற அங்கத்தினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்நது தோள் கொடுக்கும் குடும்பம். எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு நடன நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து பின்னி பெடலெடுக்கப் போகிறார். ஸ்பான்ஸர்கள் விழயத்தில் வசூல் சக்கரவர்த்தினி - இவர் சேவையில் இந்த வருடம் நிகழ்ச்சி ஜொலி ஜொலிக்குது.
சரவணன் - எல்லோருக்கும் நண்பர். இனியவர். பண்பாளர். இன்னொரு தூத்துகுடி எக்ஸ்பிரஸ். செயல் வேகம் பிரமிக்க வைக்கிறது. இந்த வருடம் எங்களுல் ஒருவரானவர்.
குணா - இன்னமும் அபிராமி கிடைக்காத குணா. கடைக்குட்டி. ஆனால் படுசுட்டி. இவரும் இவ்வருடம் உள்ளே வந்திருக்கிறார்.
நன்றி.. மக்களே... எனக்கு இன்னமும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. என் உரையை தொடர்கிறேன்.
முதலில் இவ்வளவு ஆர்வம் எடுத்து இங்கு வந்திருக்கும் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக குழந்தைகளௌக்கும் அவர்களுடன் கடந்த பல வாரங்களாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நிகழ்ச்சி தயார்ப்பாளர்களுக்கும்.
வருடா வருடம் நடந்து வரும் நிகழ்ச்சியில் ஆங்காங்ககே காணப்படும் குறைபாடுகளை களைந்து ஒவ்வொரு வருடம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காண முயற்சி செய்து வருகிறோம். எப்போதும் மல்டி பர்ப்பஸ் ரூமில் நடக்கும் தமிழ் புத்தாண்டு விழா இவ்வாண்டு உள்ளரங்கம் - தியேட்டரில் நடக்கிறது. உள்ளே தின்பண்டங்கள் மற்றும் குளிபானங்களை கொண்டு வராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை கூடிய மட்டும் அமரச் செய்யுங்கள். அப்போதுதான் எல்லோரும் நிகழ்ச்சிகளை நல்ல விதத்தில் கண்டு களிக்க முடியும்.
உணவு இடைவேளையில் வழங்கப்படும். எனவே நேரமாகி பசி பின்னிவிடுமோ என்று கவலைப் படாமல் உற்சாகமாக பாருங்கள். உணவு இடைவேளையில் வயிற்றுக்கு உணவோடு செவிக்கும் உணவு உண்டு. யார் வேண்டுமானாலும் உணவு அறையில் பாடலாம். விருப்பம் உள்ளவர்கள் திரு. மூர்த்தியை அணுகி உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். உணவு இடைவேளைக்குப் பிறகுதான் பேரியவர்களின் நிகழ்ச்சிகள். எனவே விரைவில் உணவருந்தி விட்டு திரும்புங்கள். அமைதியாக இருந்து விழாவை நல்ல முறையில் நடத்த எங்களுக்கு உதவுங்கள். விழா நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் உரிய நேரத்திற்கு முன்னதாக மேடைக்கு பின்புறம் வந்து விடவும். காலம் இன்று பொன் போன்றது.
விழா பற்றிய உங்கள் எண்ணங்களை feedback@sactamil.org என்ற மின் முகவரிக்கு அனுப்பவும். வையக விரிவு வலயில் எங்கள் முகவரி www. sactamil.org. என் உரை முடிந்ததும் நிக்ழ்ச்சி நடத்துனர் ராதாரவி மேடைக்கு வருவார்கள்.
உரையை முடிக்கும் முன் ஒரு வேண்டுகோள். ஜனவரி மாதம் மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா ரங்கராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை. என்னைப் போல எண்ணற்றவர்களை தமிழ் இலக்கியத்தின்பால் இட்டுச் சென்ற சமகால மேதை. இலக்கியம், விஞஞானம், நாடகம், திரைத்துறை, இதழியல் என்று பன்முகம் கொண்ட படைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தயவு செய்து எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்துங்கள்.
நன்றிகள் மற்றும் வணக்கங்கள்....

Labels: TNY2008